Saturday, May 9, 2009

மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக இன்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் வருகை தந்தார். இவர் வருகையை ஒட்டி ஜெமினி மேம்பாலம் முதல் சாந்தி தியேட்டர் வரை போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப் பட்டது. சைக்கிள் கூட அனுமதிக்கப் படவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் மீது நிலவி வரும் கடுமையான அதிருப்தி காரணமாக இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக மன்மோகன் சிங் மீது செருப்பு வீசக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நிறுத்தப் பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மவுன்ட் ரோடு மட்டுமல்லாமால் மவுன்ட் ரோட்டில் இணையும் அனைத்து சாலைகளும் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தன. பொது மக்களுக்கு இவ்வளவு இன்னல் கொடுத்து கருணாநிதியை பார்த்து மன்மோகன் சிங் என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
அநேகமாக தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்து கருணாநிதிக்கு ஆறுதல் சொல்வதற்காக இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் எழுகிறது.

Monday, May 4, 2009

சிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிபுசோரேன், ஆளுநர் பர்னாலா மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சந்தித்து உரையாடினால் .. .. .. ... ..

(என்று ஒரு கற்பனை)

கருணாநிதி : வாங்க சோரேன். எப்படி இருக்கீங்க ?

சோரேன் : அத ஏன் சார் கேக்கறீங்க... ஒரே நாறப் பொழப்பு சார். எலெக்சன்ல ஜெயிக்கறதுக்கு கண்டவன் கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு... இந்த ஆதிவாசிப் பசங்க தொந்தரவு தாங்க முடியல சார். என்னா கேள்வி கேக்குறாங்க.. ..

கருணாநிதி : இங்க மட்டும் என்ன வாழுதாம். உடம்பு சரியில்ல, கடைசி வாய்ப்பு குடுங்க, உங்களுக்காக உயிரக் குடுக்கறேன்னு.. .. என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்றாங்க சார்.

சோரேன் : அட நீங்க வேற... நீங்களாவது பவர்ல இருக்கீங்க.. அங்க நான் எந்த பவர்லயும் இல்லயா. ஒரு பயலும் மதிக்க மாட்றான்.

கருணாநிதி : வாங்க பர்னாலா. நீங்க இருக்கறதாலதான் என் வண்டி ஓடுது.

பர்னாலா: அட ரொம்ப புகழாதீங்க. நீங்க என்னை கவர்னரா கூப்பிடலன்னா என்ன பஞ்சாப்ல யாரு மதிப்பா. என் பசங்கதான் இவ்வளவு செழிப்பா இருக்க முடியுமா என்ன ?

கருணாநிதி : நீங்க இல்லன்னா என் பசங்களும் செழிப்பா இருக்க முடியாதே.

சோரேன் : பேசாம நானும் பர்னாலா மாதிரி கவர்னரா போயிடலாம்னு இருக்கேன். இந்த எலெக்சன், ஓட்டு கேக்கறது, எந்த தொல்லையும் இல்லை. ஆமா கருணாநிதி சார்.. நீங்க ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க ?

கருணாநிதி : பிரச்சாரம்னு கூட்டத்துக்கு போனா என்ன பேசுறதுன்னே தெரியல... அம்மா தாயே... சோனியா தாயே காப்பாத்தும்மா அப்பிடின்னும் கெஞ்சிப் பாத்துட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறான்.

பர்னாலா : கருணாநிதிஜி நீங்க கவர்மென்ட் ஆஸ்பித்திரில்ல படுத்திருந்தா இன்னும் நல்லா சிம்பதி கிடைச்சுருக்கும் இல்ல ?

கருணாநிதி : அதெல்லாம் அரசு ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் சார். நான் போய் அங்க எப்படி படுக்கறது. இவ்ளோ பேசுரீங்களே ஏன் நீங்க அங்க போகாம ஏன் அப்போல்லோவுக்கு வந்தீங்களாம். அதே காரணத்துக்குத்தான் நானும் இங்க வந்தேன். அது சரி உங்க ரெண்டு பசங்களும் எப்படி இருக்காங்க ? பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா ?

பர்னாலா : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன குறை. பேருக்குதான் நான் பல்கலைக்கழக வேந்தர். ஆனா பசங்கதான் எல்லா யுனிவர்சிட்டி யையும் பாத்துக்கறாங்க. உங்க பசங்க எப்படி இருக்காங்க ?

கருணாநிதி : ம்ம். நீங்க பசங்களுக்கு யுனிவர்சிட்டிகளை கொடுத்த மாதிரி நான் தமிழ்நாட்டையே பிரிச்சு கொடுத்துட்டேன். ஒரு பொண்ணுக்கு டெல்லியும் ஒரு பொண்ணுக்கு பெங்களுரும் கொடுத்துட்டேன். இப்போ மதுரையை பாத்துக்கற பையன் நானும் டெல்லி போகனும்னு அடம் பிடிக்கிறான். சரி போடான்னு எலெக்சன்ல நிக்க வச்சுட்டேன்.

சோரேன் : கருணாநிதி சார்... நீங்க எப்படி சார் இந்த சர்க்காரியா கமிஷன்ல இருந்தெல்லாம் வெளியே வந்தீங்க. என் மேல கேஸ் மேல கேஸ் போட்டு உயிர எடுத்துட்டாங்க சார்.

கருணாநிதி : இதெல்லாம் ஒரு விஷயமா... ... நீங்க ஆதிவாசி மக்கள நாகரிகப் படுத்துறதுக்காக அரசியலுக்கு வந்தீங்க. நான் நல்லா இருக்கற மக்கள ஆதிவாசி மக்களா மாத்துறதுக்காக அரசியலுக்கு வந்தேன். அப்போ எனக்கு எவ்ளோ மேட்டர் தெரிஞ்சுருக்கும்னு நீங்களே யோசிங்க..

சோரேன் : அது கரெக்ட்தான் சார். உங்கள மாதிரி வருமா.

கருணாநிதி : ஆமா உங்க ஊர்ல ஆஸ்பத்திரியே இல்லையா... எதுக்கு இவ்ளோ தூரம் வந்தீங்க.

சோரேன் : சார் அங்க ப்ரைவேட் ஆஸ்பத்ரில படுத்தா.. இந்தாளு என்ன ஏழைகளுக்கு பாடுபட்றேன்னுட்டு ப்ரைவேட் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கான்னு ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிச்சுடுவாங்க சார். ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் சென்னையில இருக்கற அரசு மருத்துவமனையிலதான் ட்ரீட்மென்ட் எடுத்தேன்னு சொன்னா நம்பிடுவாங்க அதான்.

கருணாநிதி : உங்க ஊர் பரவாயில்ல சார். ஈசியா ஏமாத்த முடியுது... ஆனா. இங்க தமிழ்நாட்டுல தலைகீழா நின்னு டக்கர் அடிச்சு பாக்கறேன். ஒண்ணும் கதை நடக்க மாட்டேங்குது.

பர்னாலா : கருணாநிதிஜி. ஆஸ்பத்திரிலேயே படுத்திருந்து பிரச்சாரத்த கோட்டை விட்றாதீங்க.. கவர்மெண்ட் மாறிடுச்சுன்னா என்னை ஜார்கண்ட் கவர்னரா மாத்திடுவாங்க.. அப்புறம் நான் இந்த ஆள் கூடத்தான் மாறடிக்கனும்.

கருணாநிதி : ஒன்னும் கவலை படாதீங்க பர்னாலாஜி. 12ந் தேதி வரட்டும். எப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கறேன் பாருங்க. சூப்பர் சுப்பராயனே நீங்கதான் பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்ட்டர்னு சொல்றாரா இல்லையா பாருங்க..

(டாக்டர்கள் வரும் ஓசை கேட்பதால் மூவரும் கலைந்து செல்கிறார்கள்)

உடன்பிறப்புக்கு கடிதம்

உடன்பிறப்பே, மருத்துவமனையில் இருந்ததால் சில நாட்களாக கடிதம் எழுதவில்லை. இருப்பினும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சண்முகநாதனின் துணையோடு கடிதம் எழுதுகிறேன். கழக அரசு சொல்வதை செய்யும். செய்வதைத் தான் சொல்லும். இதை அறியாத எத்தர்கள் சிலர் கழக அரசுக்கெதிரான விஷமத்தனமான பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதை நீ அறிவாய்.
அவர்களுக்கு பதில் கூறும் விதமாகத்தான் இந்தக் கடிதம். பல நாட்களாய் நானே கேள்வி கேட்டு நானே பதில் கூறி அறிக்கைகள் வெளிவந்திருப்பதை நீ அறிவாய். எனக்கு வசதியான கேள்விகளை நானே கேட்டுக் கொண்டு பதில் அளிப்பதால் மக்களின் மனத்தில் கழக ஆட்சி பற்றிய சந்தேகங்கள் எள்முனையளவும் இல்லாமல் செய்வதுதான் அதன் நோக்கம். கழகத்தையே குடும்பமாக நினைத்து வாழவேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னதற்கேற்ப த்தானே நான் நடந்து வருகிறேன். கழகத்தை குடும்பமாக நினைப்பது போலவே குடும்பத்தை கழகமாக நினைத்து வழிநடத்தி வருவது தவறா என்பதை வரலாறுதான் தீர்மானிக்கும். அண்ணா விட்டுச் சென்ற வழித்தடத்தில் அவர் இருந்தால் அவரே மலைக்கும்படி இன்று கழகத்தை வளர்த்திருக்கிறேனா இல்லையா ? அந்த அம்மையார் போல் இன்னொருவர் குடும்பத்தின் பெயரிலா சொத்து வாங்கிக் குவிக்கிறேன் ? என் குடும்பம் நன்றாக இருந்தால்தானே நாளை என்னை விடச் சிறப்பாக கழகத்தை வழிநடத்த முடியும் ? அதனால்தோன என் குடும்பத்தினர் சொத்து வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதை நானே ஆசி வழங்கி அனுமதித்து வருகிறேன். இது தெரியாத எத்தர்கள் பொறாமையால் என்மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். அண்ணா பண்படுத்திய இதயம் இது. இதை விட என்ன கேவலம் வந்தாலும் ஆட்சியை மட்டும் இழக்க மாட்டேன். சோனியா காந்தியிடம் காப்பாற்றுங்கள் தாயே என்று என் ஆட்சியை காப்பாற்ற கெஞ்சவில்லையா ? இதைவிட என்ன கேவலம் வேண்டும் ?
புதிதாக பஸ் கட்டணத்தை குறைத்து விட்டேன் என்று கூப்பாடு போடுகின்றனர் சிலர் ! பஸ் கட்டணத்தை ஏற்றும்போது யாருக்காவது சொன்னேனா ? அதேபோல் குறைக்கும்போதும் யாருக்கும் சொல்லாமல் குறைத்து விட்டேன். இது தவறென்று இங்கே மாநிலத்தில் என்னிடமே சம்பளம் வாங்கிக் கொண்டு என்னை இது வரை வந்து பார்க்காத ஒரு தேர்தல் அதிகாரி இருக்கிறாரே அவரும் அந்த அம்மையாருடன் சேர்ந்து கொண்டு புலம்புகிறார். பஸ் கட்டணத்தை குறைத்து விட்டேன் என்று புலம்பும் யாரும் பஸ்சில் போவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் உடன்பிறப்பே ! பஸ் கட்டணம் அதிகம் இருப்பதால் அதிக பணத்தை எடுத்துச் சென்று பணிமனையில் கட்ட சிரமமாக இருக்கிறது என்று நடத்துனர்களாய் பணிபுரியும் தொழிலாளத் தோழர்கள் என்னிடம் வைத்த கோரிக்கையை ஏற்றுத் தான் இவ்வாறு கட்டணம் குறைக்கப் பட்டது. பஸ் கட்டண குறைப்பை கண்டிக்கும் அனைவரும் தொழிலாளர் விரோதிகள் என்பதை மறந்து விடாதே உடன்பிறப்பே !
மருத்துவர்கள் கூட அந்த அம்மையாரோடு சேர்ந்து கொண்டு என்னை ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். நான் ஓய்வெடுத்தால் கழகம் மற்றும் குடும்பத்தின் நலனை யார் கவனிப்பது. பித்தர்கள் புலம்பலை புறந்தள்ளி விட்டு கழகக் கண்மணிகளாம் அழகிரி, தயாநிதி ஆகியோரின் வெற்றிக்கு பாடுபடு உடன்பிறப்பே ! புறநானூறு கண்ட புலியே ! வாக்குச் சாவடி உனக்கு எம்மாத்திரம் ! வாக்குச் சாவடியை கைப்பற்ற உடனே களம் காண வா ! ஓடோடி வா ! என் குடும்பத்தின் சரித்திரத்தில் உனக்கு என்றென்றும் இடம் உண்டு !

Thursday, April 30, 2009

தம்பியின் உண்ணா விரதமும் அண்ணாவின் கவிதையும்

தமிழக அரசியல் வாரப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கவிதை
எழுதியவர் நக்கீரன்.
படம் ஒப்பாரி

சுத்தமானது என் சமாதி
சத்தியமாய்ச் சொல்கிறேன் !

ஆண்டுக்கு இரண்டு முறை தான்
தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள்
பிறந்த நாளில் ஒரு முறை
மரித்த நாளில் மறு முறை

அது என்ன ஏப்ரல் 27ல்
என் சமாதியில் இத்தனை கூட்டம் !!
கடும் கூச்சல் !!
ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை
ஏன் எழுப்பினார்கள் என்பது
புரியாமல் தவித்தேன்.

சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை
ஆனால், அதிகாலையில் தம்பி வந்ததுமே
தூக்கம் கலைந்திற்று ! துக்கம் கவ்விற்று !!
வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா ?

அதிகாலை என் இருப்பிடத்தைத்
தேடி வந்த காரணத்தை கருணாநிதி கொன்னதும்
தான் தெரிந்துகொண்டேன்.
இலங்கைத் தமிழர்களுக்காக
என் சமாதியில் உண்ணாவிரதமாம் !

அருமை தம்பி கருணாநிதி
பச்சை தண்ணீரை கூட அருந்தாமல்
அவர்தம் மனைவியரோடு
உண்ணாவிரதம் இருந்தது என்னை
உருக வைத்தது.

ஆருயிர் இளவலைக் காணவந்த
கட்டிளங்காளைக் கூட்டமோ
சமாதிக்கு வெளியே விற்கும் சமுசாவையும்
ஐஸ்கிரீமையும் தின்றதுதான்
மனதை நெருடியது.

என் தம்பியோ உயிரை ஓர் கையிலும்
ஆட்சியை ஓர் கையிலும்
பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும்
சக்கர நாற்காலியில்
நகர்ந்து வருவது.. .. ஐயகோ
என்னே கொடுமை !

இத்தனை கொடுமைகளுக்கிடையே
இலங்கைத் தமிழர் பிரச்சினையுமா தம்பி !
அந்தப் பிரச்னைக்குத் தான் எப்போதோ
சமாதி கட்டிவிட்டோமே தம்பி !
காலமெல்லாம் ஆட்சியை தக்க வைப்பதெப்படி ?
மத்தியிலும் மாநிலத்திலும்
நம் கழத்தின்... ... மன்னித்துவிடு தம்பி !
நம் குடும்பத்தின் குரலே
ஒலிக்க வைப்பதெப்படி ?

இனியவை நாற்பதும்
கைப்பற்றுவதெப்படி ? அதிலேயும்
மதுரை மகனுக்குத் தனி கவனம் !
தப்பித் தவறி மீண்டும்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்
அழகிரிக்கு என்ன துறை ?
கனிக்கும் தயாவுக்கும் என்னென்ன ?
இப்படி எண்ணம் ஓட
எப்படி வரும் மனம்
இலங்கைத் தமிழரின் நலம் காண ?

நம் தம்பிமார்களின் மண்டையை
உடைத்து குருதியை குடித்த
காங்கிரஸை எதிர்த்துதான்
ஆட்சியையே பிடித்தோம் !
அதே காங்கிரஸ்காரனை
ஆட்சிக்கட்டிலில் ஏற்ற
தாங்கிப் பிடிப்பது இன்று
என் அருமை தம்பியல்லவா ?
அந்த அளவுக்கு உயர்ந்திருக்கும்
உனது மனிதாபிமானம்.
யாருக்கும் புரியவில்லையே தம்பி !

இருப்பது ஓர் உயிர் -
போனால் போகட்டும் என்று
மேடைதோறும் முழக்கமிடுவாய் !
இந்த வசனத்தைத் தான் நான் உன்னிடம்
அதிகமாகக் கேட்டதுண்டு !
அதே வசனத்தை
என் சமாதியில் மீண்டும் ஒரு முறை
கேட்டபோது, உனக்கு அருகே இருந்த
ஏர்கூலர் காற்றில் என் சட்டை
ஆடுவதுபோல் பரவசப்பட்டேன் !

தினம் தினம் ஆயிரக்கணக்கில்
தமிழர் பிணத்தின் ரத்தங்களை
உறிஞ்சிய ராஜபக்ஷேவைக் கண்டித்து
நீ நடத்திய உண்ணாவிரதத்தில் கண்ட
காட்சிகள் என் கண் முன்னே விரிகிறது தம்பி !

1967ல் நாம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தோமே !
அந்த தரித்திரம்தான் இலங்கைத் தமிழர்களுக்கு
இன்னலாக வந்து விட்டது தம்பி !
என்ன தம்பி ! எழுந்து விட்டாய் !
நான் சொல்ல வந்ததைச் சொல்லவிடு !
காங்கிரஸ்காரனே தமிழ்நாட்டை ஆண்டிருந்தால்
இந்தச் சிலுவையை நீ சுமந்திருப்பாயா ?

நமது முதுகில் சவாரி செய்து
கொண்டிருக்கும் காங்கிரஸ்காரன் தலையில்
அல்லவா ஆணி இறங்கியிருக்கும் -
அதற்காகத்தான் சொன்னேன்
நான் ஆட்சியைப் பிடித்தது தரித்திரமென்று !

ஆயிரம் பிரச்னைக்கு நடுவில்
இலங்கைத் தமிழர் நலன் கருதி
என் சமாதிக்கு வந்தோயே தம்பி !
நீ வந்ததால்தான், ஆண்டுக்கு இரண்டுமுறை
சுத்தமாகும் என் சமாதி,
மூன்றாவது முறையாகச் சுத்தமானது!

நன்றி தம்பி! நன்றி !!
நான் போட்ட கணையாழியை
பத்திரமாக வைத்திருந்தாய் !
நாம் வகுத்த கொள்கை ? அதுதான்
என் சமாதியிலேயே எப்போதோ
அடக்கம் செய்யப்பட்டுவிட்டதே தம்பி !

-நன்றி: தமிழக அரசியல்