Sunday, May 23, 2010

கருணாநிதியின் பல்வேறு பரிமாணங்கள்.




ஏதாவது ஒரு பிரிவோ, அல்லது அமைப்போ பாராட்டு விழா நடத்தினால், உடனே, அந்த அமைப்பில் தான் ஒரு அங்கம் என்று பேசுவது கருணாநிதிக்கு வழக்கம். விடுதலை (கழுதைகளின்) சிறுத்தைகளின் சார்பில் நடந்த பாராட்டு விழாவிலே பேசிய போது, என் வாழ்வே காலனியில் தான் துவங்கியது என்றார். நேற்று அரசு ஊழியர்களின் மாநாட்டில் பேசும் போது, நானும் ஒரு தொழிலாளி என்றார். பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினால், நானும் ஒரு பத்திரிக்கையாளர் என்பார். சினிமா பாராட்டு விழாவில் பேசினால் கேட்கவே வேண்டாம்.

இப்படிப் பேசும் கருணாநிதி, பல்வேறு அமைப்பினர் நடத்தும் விழாக்களுக்கு சென்று, அந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டால், தன்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்வார் என்று சவுக்கு கற்பனை செய்த போது…..

மென்பொறியாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா


இந்த விழாவுக்கு, இவனை அழைத்தது எப்படிப் பொறுத்தம், இவனுக்கு என்ன தகுதி உண்டு, இவன்தான் பள்ளிப் படிப்பையை தாண்டாதவன் ஆயிற்றே, என்று சிலர் கேள்வி எழுப்பக் கூடும். ஆணவத்தோடு அறிக்கை விடக் கூடும்.

நானும் பொறியாளன்தான். அதனால் இந்த விழாவிலே, கலந்து கொள்ள எனக்குத் தகுதி உண்டு. எப்படி என்று எதிர்க் கேள்வி கேட்போருக்காக சொல்கிறேன்.
2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலே, அந்த அம்மையாரின் இருண்ட ஆட்சி நடந்து கொண்டு இருந்த நேரம். அப்போது விவசாயிகள் எலிக் கறி சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி, என் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல வந்து இறங்கியது.

எலிக்கறி சாப்பிடும் விவசாயிகள், அந்த எலிகளை எப்படிப் பிடிப்பார்கள் ? வேகமாக ஓடும் எலியை பிடிப்பது விவசாயிகளுக்கு சிரமம் என்று, அப்போதே, கழக உடன் பிறப்புகளை அனைத்து விவசாயிகளுக்கும், அஞ்சுகம் அறக்கட்டளையின் சார்பாக, எலிப்பொறி வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டேன். அதனால் நானும் பொறியாளன் தான்.


முடிதிருத்துவோர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

திருக்குவளை கிராமத்திலே, ஒரு ஏழையின் குடும்பத்திலே பிறந்த, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனான இந்த கருணாநிதிக்கு, எப்படி, இந்த விழாவிலே கலந்த கொள்ளும் தகுதி என்று ஏளனக் கேள்வி எழுப்போருக்காகவே நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ஏனென்றால், இது போல, பல விழாக்களிலே என்னோடு கலந்து கொண்டு, எனது இது போன்ற உரைகளை பல முறை கேட்டிருக்கும் அன்பழகன், நான் எது பேசினாலும் ஆமோதிப்பார்.

என்னை விட கட்சியிலும் வயதிலும், மூத்தவராக இருந்தாலும், இப்போது ஸ்டாலினை தனது தலைவர் என்று கூறும் அளவுக்கல்லவா அவரை நான் பக்குவப் படுத்தி வைத்திருக் கிறேன் ?


இவ்விழாவிலே எனக்கு கலந்து கொள்ள என்ன தகுதி என்று கேட்போரே… கேளுங்கள். ஐந்து முறை முடியேற்று, ஆட்சி புரிந்திருக்கிறேனல்லவா ? இதை விட என்ன தகுதி வேண்டும். குடி ஆட்சி என்று பெயருக்கு அரசியல் சட்டம் கூறினாலும், உண்மையில் முடியாட்சி போலல்லவா எனக்குப் பிறகு எனது மகனுக்கும் மகளுக்கும் பட்டம் சூட்டும் வேளையில் இறங்கியிருக்கிறேன் ?

இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் எனக்கு ?

என் தலையைப் பார்த்து விட்டு, என்னை “முடி சூடா மன்னன்“ என்றல்லவா கூறுகிறார்கள் ? இதை விட என்ன தகுதி வேண்டும் எனக்கு, முடி திருத்துவோர் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள ?



செருப்பு தயாரிப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே நான் எப்படிக் கலந்து கொள்ளலாம் என்று சிலர் ஐயப் பாட்டை எழுப்பக் கூடும். அவர்கள் அவ்வாறு ஐயப் பாட்டை எழுப்புவது, சில ஐயர்களும், ஐயங்கார்களும் சொல்லிக் கொடுத்ததனால் அன்றி, அவர்களாகவே இவ்வாறான ஐயங்களை எழுப்ப மாட்டார்கள். நான் செருப்பு போட்டுக் கொண்டிருக் கிறேனே .. இதை விட எனக்கு என்ன தகுதி வேண்டும் ?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தம்பி திருமாவளவனின், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், எனக்கு, அம்பேத்கார் சுடர் விருது அளிக்கப் பட்டது. அந்த விழாவிலே நான் கலந்து கொண்டு பேசிய போது, நான் என் வாழ்க்கை தொடங்கியதே, “காலனியில்தான்“ என்று கூறினேன். அன்று நான் குறிப்பிட்டது, “காலணி“.

ஆனால், சில பார்ப்பன ஏடுகள் வேண்டுமென்றே விஷமத்தனத்தோடு, அச்செய்தியை திரித்து வெளியிட்டன.

திருமணப் பந்தியில் இலை எடுப்போர் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

இந்த விழாவிலே, இந்த கருணாநிதி ஏன் கலந்து கொள்கிறான் என்று கேட்பார்கள் சிலர். நானும் இலை எடுப்பவன் தான். எப்படி என்கிறீர்களா ? தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம், கட்டிக் காத்து, பத்திரமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்த வேளையில், என் நண்பர் எம்.ஜி.ஆர், தெரியாத்தனமாக, சிலரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனியாக சென்று ஒரு கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சிக்கு அவர் வைத்த சின்னம், இரட்டை இலை.

1989லே, மீண்டும் கழக ஆட்சியை நிறுவியதன் மூலம், இலையை எடுத்து தமிழ்நாட்டை விட்டு வெளியே போட்டவன் நான்தானே ?

அதனால் நானும் இலை எடுப்பவன் தான்.


இப்போதும் அந்த அம்மையார், தமிழ்நாட்டினுள்ளே, எப்படியாவது, இலையைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான்தான் இலை எடுப்பவன் என்று சொன்னேனே. அந்த அம்மையர் இலையை கொண்டு வந்தால் நான் எடுத்துப் போட்டு விடுவேன். அதனால் தமிழக மக்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.


துப்புறவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பிலே பாராட்டு விழா

எத்தனையோ, பாராட்டு விழாக்களுக்கான அழைப்புகள் எனக்கு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அத்தனை விழாக்களிலும், எனக்கு கலந்து கொண்டு, அந்த விழாக்களை சிறப்பிக்க வேண்டும் என்ற ஆவலும், உந்துதலும் இருந்தாலும், இந்த விழாவிலே நான் ஏன் கலந்து கொண்டேன் என்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. ஏனென்றால், துப்புறவு தொழிலாளர்கள், ஊரிலே உள்ள குப்பைகளையும், கூளங்களையும் சுத்தம் செய்கிறார்கள். ஊரைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

நானும் அரசாங்க கஜானாவை சுத்தம் செய்து, அதில் இருக்கும், காசு பணம் என்ற கழிவுகளையெல்லாம், எனது வீட்டிலே வைத்து விட்டு, நாடும் மக்களும் நலன் பெற வேண்டும், நன்கு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கில், சுத்தம் செய்து வைக்கிறேன். அதனால், நானும் ஒரு துப்புறவு தொழிலாளிதானே ? அதனால் தான் சொல்கிறேன், இந்த விழாவிற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன்.



சவுக்கு

8 comments:

  1. //என் தலையைப் பார்த்து விட்டு, என்னை “முடி சூடா மன்னன்“ என்றல்லவா கூறுகிறார்கள் ? இதை விட என்ன தகுதி வேண்டும் எனக்கு, முடி திருத்துவோர் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்ள ?//
    ஹா ஹா .....
    சவுக்கு,செம குசும்புயா உமக்கு....

    ReplyDelete
  2. உடன் பிறப்புMay 23, 2010 at 11:05 AM

    முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தமிழக முதலமைச்சர் திருநங்கைகளின் மாநாட்டிலும், மானாட-மயிலாட நிகழ்ச்சிக் கலைஞர்களின் மாநாட்டிலும் கலந்து கொண்டால் என்ன பேசுவார் என்பதையும் கூறுங்கள்.

    ReplyDelete
  3. தோழர், எனது மருத்துவ செலவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கோரிக்கை வைக்கிறேன். இப்படியெல்லாம் எழுதி வயிற்றை தொடர்ந்து புண்ணாக்கினால் எப்படி???

    ReplyDelete
  4. நன்றி, திரு ஒளிறி (illuminati) அவர்களே

    ReplyDelete
  5. திரு.உடன்பிறப்பு அவர்களே, நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்தால், தனிப்பட்ட முறையில், உங்களுக்கு, மெயிலில் அனுப்பி வைக்கப் படும்

    ReplyDelete
  6. mika nantraaka irumthathu. Vipasaarikal maanaattil ivar kalanthu kontaal enna pesi iruppar ?entru yosiththeerkalaa!!!

    ReplyDelete
  7. :)

    கோமாளிகள் மாநாட்டுக்கு இவரை யாரும் அழைக்கவில்லையா ?

    ReplyDelete