Thursday, July 22, 2010

ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது

அன்புள்ள சவுக்கு வாசகர்களுக்கு...

இரண்டு நாள் காலதாமதத்திற்கு மன்னிக்கவும் காரணம் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. சவுக்கு பலரை வெளுத்து வாங்குகிறதே இவர் கதி என்னவாகுமோ ? என்று பலர் எண்ணியிருக்க கூடும்…ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு சவுக்கின் சவுக்கடி கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் கோவை செம்மொழி மாநாட்டின் போது கூடிய ‘’ டர்டி பாய்ஸ் ’’ சவுக்கை முடக்கிவிட வேண்டும் என்று ஒரு மாஸ்டர் பிளான் (எது பன்னாலும் பிளான் பண்ணி பண்ணனும்) தீட்டப்பட்டது. ‘’I will teach him a lesson‘’ என்று அன்று ஊளையிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினார் டர்டி பாய்ஸ் டீமின் தலைவர் ஐ.ஜி ஜாபர் சேட். அவருக்கு உறுதுனையாக கர்மம் பிடித்த வீரர் காமராஜ் உள்ளிட்ட பலர் உடன் சேர்ந்து உளையிட்டு செம்மொழி மாநாட்டையே டர்டி பாய்ஸ்ஸின் ஒப்பாரி மாநாடாக மாற்றினர்.

இதன் தொடர்ச்சியாக சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்ட ‘’ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம்‘’ என்ற பதிவின் மூலம் நம்ம டர்டி பாய்ஸ் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் செய்து வரும் ‘’ சமூக சேவை ‘’ ஆதாரங்களுடன் அம்பலபடுத்தப்பட்டது.

இந்த பதிவு சவுக்கின் பல்வேறு தரப்பட்ட வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மூத்த பத்திரிக்கையாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை நண்பர்கள், டர்டி பாய்ஸின் எதிரிகள் என்று பலர், சவுக்கை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த பதிவு அனைத்து துறைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களின் சமூக சேவை அம்பலமானவுடன் ஆத்திரம் அடைந்த டர்டி பாய்ஸ் தங்களுக்குள் கான்ப்ரன்ஸ் காலில் புலம்பினர் பின்னர் சவுக்கை முடக்கும் புதிய சதி திட்டத்தை நம்ம ஜாபர் அங்கிள் முன்வைக்க ஆலோசனைகள் குவிந்தன, அப்பொழுது புலனாய்வு பத்திரிக்கையின் கர்மம் பிடித்த வீரர் சவுக்கை எழுதுவது சங்கர் தான் என்ற முக்கிய தகவலை கூறினார்.

பின்னர் தொடங்கியது டர்டி பாய்ஸின் தீவிர நடவடிக்கைகள்
இவனை ஆள் வைத்து அடிக்கலாமா இல்ல ‘’உள்ள‘’ வைக்கலாமா ? என்று தொடர்ந்து ஆலோசனையில் இவனை உள்ளே வைப்பது தான் சரி என்று முடிவெடுக்கப்பட்டது.(நாட்டாமை சரியான தீர்ப்பு)

21.07.10 அன்று சங்கரின் வீட்டில் காலை 8.30 மணிக்கு சென்னை புறநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்கள் சென்றனர். விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு சங்கரை அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த காவல் ஆய்வாளர் டர்டி பாய்ஸ்க்கு போன் போட்டுக் கொண்டே இருந்தார். சுமார் 12 மணிக்கு டர்டி பாய்ஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட ஒரு கதை புகாராக மாறியது. (திரைத்துறையினர் டிவிடியை பார்க்காமல் கதை வேண்டுமானாலும், டர்டி பாய்ஸை அணுகலாம்)…



அந்த அளவு சுவாரஸ்யமான கதை சங்கருக்காக முதல் தகவல் அறிக்கையில் ஜோடிக்கப்பட்டது. சவுக்கு வாசகர்களுக்காக அந்த சுவை மிகுந்த கதை இதோ….


இந்த கதையின் ஹீரோ சுதாகர் (நம்ம டர்டி பாய்ஸின் கற்பனை கதாநாயகன்) இவர் ஒரு வீடு புரோக்கர். (வீடு புரோக்கர் மட்டும் தான்) நம்ம ஹூரோ எம்.எம்.டி.ஏ காலணிக்கு வீடு பார்க்க பைக்கை எடுத்துகிட்டு பூந்தமல்லி ஹை ரோடு வழியா வந்த போது எதிரே நம்ம சங்கரு. அது தான் டர்டி பாய்ஸின் நிஜ வில்லன் ஒரு பைக்கை ஒட்டிட்டு வந்து மோதுற மாதிரி மோதாம நின்னாரு….

ஹூரோகிட்ட மோதுற வில்லன் சும்மா விட மாட்டாங்க…அதுவும் நம்ம டர்டி பாய்ஸ் ஹூரோகிட்ட மோதினா ? சும்மாவா விடுவாங்க? கிழிஞ்ச சட்டையும் உடைஞ்ச செங்கலையும் கையில ஏந்தி கண்ணகி மாதிரி காவல் நிலையம் போய் டர்டி பாய்ஸ் ஹூரோ கதற (வழக்கமா வில்லன் தான்யா ஓடுவான்! டர்டி பாய்ஸ் கதையில ஹூரோ கூட டம்மி பீஸாவே இருக்கானே ஹய்யோ ஹய்யோ) சட்டையையும் செங்கலையும் ஆதாரமா வைச்சு நம்ம வில்லன் சங்கரை பொய் வழக்கு பதிவு செஞ்சு சிறையில அடைச்சாங்க…

இன்னிக்கு டர்டி பாய்ஸூக்கு சந்தோஷம் தான்…ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது. டர்டி பாய்ஸூக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே எழுதிய பதிவுகளை அகற்றவும், இனிமேல் எழுதாமல் இருக்கவும் சவுக்கிற்கு லஞ்சம் அளிக்க முயற்சித்தார்கள் நாம் மறுக்கவே நம் மீது வழக்கு போட்டு அச்சுறுத்துகிறார்கள்…

எந்த அடக்குமுறையும் எதிர்க்க சவுக்கு தயாராகவே உள்ளது… புதிய உத்வேகத்தோடு களப் பணிகள் தொடரும்….கொஞ்சம் பொறுத்திருங்கள்….

சவுக்கு

42 comments:

  1. savkuna savkuthan do u r job wel don

    ReplyDelete
  2. சிரிப்பு வருது சிரிப்பு வருது "பெரிய" சின்ன மனுஷ்ன் செயலைப் பார்க்க சிரிப்பு வருது.
    காசின் மீது ஆசைக் கொண்ட களவாணிகள் . நேர்மையற்ற ஆண்மையற்ற அசிங்கங்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் களப்பணி...

    "தாரசை முதலில் எடை போடு..."

    ReplyDelete
  4. தமிழ் பத்திரிகை முதலாளிகளும் டுபாக்கூர் பத்திரிகையாளர்களும் கருணாநிதியின் காலை நக்கி
    வாலை ஆட்டிக்கொண்டு திரியும் இந்த வேளையில் சவுக்கின் பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.சவுக்குதான் எனக்கு பிடித்த இணையம்.

    ReplyDelete
  5. பாசிச கருணாநிதியின் பகல் வேடத்தைக் கலைக்க சவுக்கு தொடர்ந்து சுழலட்டும்.

    வசந்தத்தின் தூதுவன் உங்களை வாழ்த்துகிறான்.

    http://pongutamilar.blogspot.com/2010/07/blog-post.html

    உங்கள் கவுண்ட் டவுன் முடியும் போது தமிழகத்தில் நிச்சயம் வசந்தம் வீசும்,

    ReplyDelete
  6. amma aatchiyil kanja
    aiya aatchiyil sengal
    innumm yannenna koooooothu nadakka poguthunu theyriyala/

    ReplyDelete
  7. kalakunga....kalakunaga.... saukku savukku thaan.

    well Done!!!

    ReplyDelete
  8. சவுக்கை சிறயில் அடைத்தாலும் விடாமல் சுழன்று கொண்டே இருக்கும் என்பது சிறையிலடைத்த மர மண்டைகளுக்கு தெரியாது. ஏன் எனில் சவுக்கை சுழற்றுவது ஒரு கை அல்ல.நெஞ்சுறுதி கொண்ட பலரின் கூட்டணி என்று.......இனியவன்.

    ReplyDelete
  9. இந்த விசயத்தில் தமிழககாவல்துறையை வன்மையாககண்டிக்கிறேன்.

    சவுக்கு சொல்வது சரியென்றால் சம்மந்தப்பட்டவர்களை உள்ளே தள்ளு
    பொய் என்றால் நேர்மையாக அவதூர்வழக்குப்போடு
    இல்லாமல் எப்போதும் போல் பொய் வழக்குப்போடாதே.

    ReplyDelete
  10. எந்த அடக்குமுறையும் எதிர்க்க சவுக்கு தயாராகவே உள்ளது… புதிய உத்வேகத்தோடு களப் பணிகள் தொடரும்….
    //

    இந்த அநீதி, அடக்குமுறை ஒழிய, உங்களுக்கு தோள் கொடுக்க, நாங்களும் உடன் இருக்கிறோம் ....

    ReplyDelete
  11. உங்களுக்கு பின்னாடி இருக்கோம் தைரியமா உங்க வேலையை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல இயலாது. ஆகையால் முடிந்த வரை உங்களது பதிவுகளை பல படித்த பாமரனுக்கு தெரியப்படுத்த உதவுகிறேன்.

    ReplyDelete
  12. Hi Sankar,
    I am ardent follower of your writings. I am distressed to know you've got in trouble with those corrupted police-wing. I guess this is time to be wise and careful. I am sure justice will be done. We all are behind you.

    SENTHIL & Friends
    USA

    ReplyDelete
  13. பொய் வழக்கு போட்டு தோழர் சவுக்கை கைது செய்த தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும், நக்கீரன் இதழுக்கும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    சனநாயகத்தின் மீது மதிப்புள்ளவர்களும், கருத்துச்சுதந்திரத்தை விரும்புபவர்களும் தோழர் சவுக்கிற்கு துணைநிற்க வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. காவல் துறைக்கும்,அரசுக்கும் என் கண்டனங்கள்.

    ReplyDelete
  15. சமீப கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌து, ந‌ட‌ப்ப‌வைக‌ளை
    நாட்டு ம‌க்க‌ள் அமைதியாய் க‌வ‌னித்து வ‌ருகிறார்க‌ள்.
    த‌மிழ்நாடு ஊட‌க‌ம், த‌விர்த்து, இள‌ம் த‌லைமுறை.
    முறைகேடுக‌ளை, கூகுள், யுடுயூப் என‌ ப‌ல‌வேறு
    த‌ள‌ங்க‌ளில் தேடி, ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள்.
    ப‌ல்வேறு த‌ர‌ப்பிலும்,ம‌க்க‌ள் மிக‌ அமைதியாய்.
    இது புய‌ல் க‌ருக்கொள்ளும் அமைதிக்குப்பின் புய‌லாய்
    மாறும் சூழ‌லை அர‌சிய‌லும், காவ‌லும் அறிந்தோ,
    அறியாம‌லோ உருவாக்குகிறார்க‌ள். புய‌லின் தாக்க‌ம்
    த‌னுஷ்கோடியில்40 ஆண்டுக‌ளுக்கு முன்பு. அர‌சிய‌ல்
    புய‌லும் அடித்து ஓய்ந்த‌து அப்போதுதான்.
    த‌மிழ‌க‌ அர‌சு இல‌ச்ச‌ணை சொல்கிற‌து 'வாய்மையே வெல்லும்'

    ReplyDelete
  16. உன் போன்ற சமூக விரோதிகளை தூக்கில் போட வேண்டும்

    ReplyDelete
  17. Both Jeya&karunanidhi should submit thier asset worth as on 1950:
    hi...hi....

    ReplyDelete
  18. வணக்கம்....this is the first time i'm reading savukku...யார் அந்த டர்டீ பாய்ஸ்?..hope u remember me..

    ReplyDelete
  19. மோதி அழித்து விடு...
    அஞ்சாத மனதுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் சவுக்கு.... தொடரட்டும்.

    ReplyDelete
  20. I am very much distressed to know you've got in trouble with those corrupted police-wing. I guess this is time to be wise and careful. hats off ur brave job.this time family support must need.we congrats ur family members those behind u to boon ur path
    thanks sir
    erullapa

    ReplyDelete
  21. ஆதரவு என்று உண்டு.
    கைது விஷயம் மிகுந்த வேதனை அளிக்கிறது

    ReplyDelete
  22. நீங்கள் கூறுவதுபோல், நாங்கள் பயந்ததுபோல் நடந்தேவிட்டது. தடைகளைக் கடந்து இன்னும் வேகமாக வீறுகொண்டு, ஆனால் ”மாற்றான்வலியை” மனதில் கொண்டு நடைபோடுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. தாங்கள்தானா அவர். இப்படியாகி விட்டதே என்று வருத்தப் படுவதா, இப்படியாவது தங்கள் முகத்தைப் பார்க்க முடிந்ததே என்று மகிழ்வதா என்று தெரியவில்லை. கடல் கடந்து இருந்தாலும் தங்களுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. கண்டனம் என்று நான் எவ்வளவு கடுமையான வார்த்தைகளைச் சொன்னாலும் தங்கள் வார்த்தைகளில் உள்ள கூர்மை வராது. தாங்கள் இவ்வளவு கடுமையாக சொல்லியும் திருந்தாவர்கள் நான் சொல்லியா திருந்த போகிறார்கள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள், தொடரட்டும் சவுக்கு சேவை

    ReplyDelete
  25. காவல்துறைக்கு கண்டனம்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள், தொடரட்டும் சவுக்கு சேவை

    ReplyDelete
  27. இந்த அநீதி, அடக்குமுறை ஒழிய, உங்களுக்கு தோள் கொடுக்க, நாங்களும் உடன் இருக்கிறோம் ....

    ReplyDelete
  28. பொய் வழக்கு போட்டு தோழர் சவுக்கை கைது செய்த தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும், என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  29. எ.எம்.ஹாரிஸ் saharatamil.tk------>சும்மா இருந்த சவுக்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி சாட்டையாக்கிட்டாங்கலே...வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் களப்பணி...

    ReplyDelete
  30. savukku, i am not seeing this as an ordinary site, its a reflecting mirror of this society,

    ungalathu VETTI payanam thodarattum ,

    we aal are with you..............

    ReplyDelete
  31. "கருத்து" என்று கனிமொழி ஆரம்பிக்கலாம், இப்படி சவுக்கு என்று யாரும் சாட்டய் சுழற்றி கருத்து எழுதுவது 'கழகம்' எப்போதும் அனுமதிக்காது. "அடக்கம் அமரருள் காக்கும் அடங்காமை "இன்டர்நெட்டில்"கவுக்கும் என்பது தான் உன்மை. இந்த தெழில் நுட்ப வளர்சிசியில் அடக்குமுறை அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டிவிடும் என்பது சங்கத்தமிழ் கலைஞசருக்கு தெரியாமல் போனது துரதிஷ்டம்!, இங்கு யாரும் அராஜகம் என்று கிளம்பும் பட்சத்தில், அடுத்த நிமிடம் உலகமுழுவதும் "பிளாக்"குகளில் ஆப்பு அடிக்கபடுவது நாம் அறிவோம். சப்ப மேட்டருக்கு போய் கைதா? திகைத்து போகவேண்டாம் மக்களே, இவரது வளைதளத்தில் "கருனானிதி" ஆட்சிய் முடிய என்று ஹரிகோட்டா ஏவுதளம் போல் செகண்ட் வரை "கவுன்ட் டவுன்" போட்டு இருப்பது....ஒவர் குசும்பு ரகம் சங்கர்!! அம்மா ஆசி ஏகத்துகு இருக்கும் போல!!

    ReplyDelete
  32. Hello Mr.Sankar,

    Please do not stop writing due to any situation,We are behind you to support.Ram Saudi Arabia

    ReplyDelete
  33. All the best Savukku...Truth only triumphs

    ReplyDelete
  34. உங்களுக்கு பின்னாடி இருக்கோம் தைரியமா உங்க வேலையை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்ல இயலாது. ஆகையால் முடிந்த வரை உங்களது பதிவுகளை பல படித்த பாமரனுக்கு தெரியப்படுத்த உதவுகிறேன்.

    ReplyDelete
  35. சமீப கால‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌வைக‌ளை ம‌க்க‌ள் அமைதியாய் க‌வ‌னித்து வ‌ருகிறார்க‌ள். இள‌ம் த‌லைமுறை, த‌மிழ்நாடு ஊட‌க‌ம் த‌விர்த்து கூகுள், யுடுயூப் என‌ ப‌ல‌வேறு த‌ள‌ங்க‌ளில் தேடி ப‌ல‌ருட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறார்க‌ள். ப‌ல்வேறு த‌ர‌ப்பிலும், புய‌ல் க‌ருக்கொள்ளும் அமைதியாய் ம‌க்க‌ள். புய‌லாய்
    மாறும் சூழ‌லை அர‌சிய‌லும், காவ‌லும் அறிந்தோ,
    அறியாம‌லோ உருவாக்குகிறார்க‌ள்.

    ReplyDelete
  36. Dear Mr.Shankar,

    I am so proud of you. I remember in one TV program, director shankar mentioned that whatever he was not able to do in real life to do good things in our country, he creates a character and make the charactar do that in the movie, thats what gentleman, indian, anniyan stories are about. But you are doing it in real. You are tearing the faces of worst sinners, who are barbarians. It may look like they are all happy today, It wont last long.

    Shankar, I don't know who you are, what your background is, financial support, who is helping you get the evidence to write these blog etc. But one thing I can say, you are a good man, A Noble man. You are doing this for a great cause. If I ever get to meet you in my life, I will do what i have in my heart. Look for people who are having the same thoughts like you have. Form a team and protect yourself well and continue your fight for noble cause. It is easy for people like me to advice, but I pray today that God's angles be with you and your family and protect you against evil and provide you with health and wealth.

    Regards
    Rajaram

    ReplyDelete
  37. சவுக்கு அவர்களே,

    உங்களது நேர்மை, துணிச்சல், எழுத்துத் திறன், உழைப்பு அனைத்துமே தமிழகத்திற்கு விடிவு காலத்தை உண்டாக்கும் என்று நம்புகிறேன். நமது சமுதாயத்தில் நடக்கும் லஞ்சமும், ஊழலும், அக்கிரமங்களும் தாங்க முடியாத நிலையை எட்டி விட்டன. இனிமேலும் நடப்பது நடக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தால், நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வே நாசமாகி விடும்.

    என்னைப் போன்றவர்களுக்கு உங்களைப் போன்று ஆதாரங்களுடன் ஊழலை வெளிப்படுத்த முடியாது. எனவே, உங்கள் தளத்தைப் பற்றிய தகவல்களைப் பரவலாக கொண்டு சேர்க்க முனைப்பெடுப்போம். உங்களைப் பற்றியும், உங்கள் தளத்தில் வெளியாகும் செய்திகளையும் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால்தான் உங்கள் மேல் பாய எந்நேரமும் காத்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் பயப்படுவார்கள்.

    ReplyDelete
  38. Go ahead we always with u

    ReplyDelete
  39. nanri savukku, muthal muraiyaga savukku padikkiren - j.v/kumu.reporter-l sankar kaithu kurithu articlel lawyer pugalenthi ref. panninar. savukkin sevai attooliam seiyum elloraiyum sodukka en vaalthukkal. URIYA NERATHIL MAPERUM SAKTHIYUDAN santhippom, athu varai anonymous than.

    ReplyDelete
  40. best wishes .to sankar and his friends

    ReplyDelete
  41. All the best Savukku. வாய்மையே வெல்லும்.

    ReplyDelete
  42. They are cutting the branch(people) in which they are sitting without realizing the fact it is the on supporting them.

    If we allow DMK to rule us one more time then we are leading ourselves into monarchy.

    ReplyDelete