Sunday, August 29, 2010

ஆண்டியும் அரசனும்…… … ….


என்னடா சவுக்கு ஏதோ பழங்காலத்துக் கதை சொல்லப் போகுதோன்னு ஆச்சர்யப் பட வேண்டம்.

சவுக்கு சொல்லப் போகும், ஆண்டியும், அரசனும், சமகாலத்தில் உள்ளவர்கள் தான். அரசர், சவுக்கு வாசகர்கள் நன்கு அறிந்தவர். ஆண்டியைப் பற்றி இப்போதுதான் சவுக்கு வாசகர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

இந்த ஆண்டி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருக்கும் துக்கையாண்டிதான் அந்த ஆண்டி. அரசர் யார் தெரியுமா கருமம் பிடித்த வீரரான காமராஜ்தான். (காமராஜ் சார், உங்க பேரை கமாராஜ், புல்ஸ்டாப் ராஜ் அல்லது காமாராஜ், சோமாராஜ், மாமாராஜ் வசூல்ராஜ் என்று ஏதாவது மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். கர்மவீரர் காமராஜ் எப்படிப் பட்டவர் என்று அவரின் உதவியாளர் வைரவன் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். அப்படிப் பட்ட மனிதரின் பெயரை வைத்துக் கொண்டு, நீங்கள் செய்யும் காரியம், யாருக்கும் அடுக்காது) சரி, இந்த கமாராஜுக்கும், துக்கையாண்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?



இருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கமாராஜ் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்று, ஆண்டியை சந்தித்து அவரோடு மதிய உணவு உண்டு ஏறக்குறைய மூன்று மணி நேரம் விவாதித்து வந்தார். என்ன விவாதம், எதைப் பற்றி விவாதம் ? எல்லாம் சவுக்கு பற்றித் தான்.

கமாராஜைப் பற்றி நாம் பல முறை விவாதித்து முடித்தாலும், இப்போது மீண்டும் விவாதிக்கும் முன், இந்த ஆண்டியைப் பற்றி பார்ப்போம்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்தான் இந்த துக்கையாண்டி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, 1986ல் ஐபிஎஸ்க்கு நியமிக்கப் பட்டவர்.



இவரை தலித் சாதி வெறி பிடித்தவர் என்று சொன்னால் மிகையாகாது. மற்ற சாதியினர், தங்கள் சாதி மீது வெறி பிடித்து இருக்கும் போது, ஒரு தலித் அதிகாரி, தனது சாதியினர் மீது பிடிப்போடு இருப்பது என்ன தவறா என்று கேட்கக் கூடும்.

சாதீய வெறி என்பது, அது பார்ப்பன சாதி வெறியாக இருந்தாலும் சரி, கவுண்டர் சாதி வெறியாக இருந்தாலும் சரி, தலித் சாதி வெறியாக இருந்தாலும் சரி. கண்டிக்கப் பட வேண்டியதே. தலித்தின் சாதி வெறி எப்படி இருக்கிறது என்பதை உத்தரப் பிரதேசத்தில் கண்டிருப்பீர்கள். இவ்வாறு வளர்த்து விடப் படும் சாதி வெறிதான், மதவெறியாகவும், மொழி வெறியாகவும், பல்வேறு வகுப்புவாத வடிவங்களை எடுத்து, மனிதத்தை அழித்து வருகிறது.

ஆகையால், சவுக்கை தலித் இன விரோதி என்று முத்திரை குத்தினாலும், சாதீய வெறி எந்த வகையில் இருந்தாலும் சவுக்கு கண்டிக்கவே செய்யும்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு புலனாய்வுக் குழு 1 மற்றும் 2 என்று இரு பிரிவுகள், 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்று பிரத்யேகமாக ஏற்படுத்தப் பட்டது.

1996 முதல் 2001 வரை, இந்த இரண்டு பிரிவுகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டன. ஏகப்பட்ட வழக்குகள் இந்த இரண்டு பிரிவுகளிலும் பதியப் பட்டு விசாரிக்கப் பட்டன.

2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், ஏற்கனவே பதியப் பட்ட வழக்குகளை மூடும் பணியும், புதிதாக திமுக மந்திரிகள் மற்றும் கருணாநிதி மேல் வழக்கு போடும் பணியும் முடுக்கி விடப் பட்டாலும், அப்போது இயக்குநராக இருந்த திலகவதி, பிறகு வந்த நாஞ்சில் குமரன், ஐஜியாக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர், திமுக வினரோடு கள்ள உறவு வைத்து, வழக்கு விபரங்களை வெளியிட்டு வந்து, நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை உடைக்க ஏராளமான உதவிகளை செய்ததால், திமுக மீண்டும் 2006ல் ஆட்சிக்கு வந்ததும், ஏறக்குறைய அனைத்து வழக்குகளுமே ஊத்தி மூடப்பட்டன.

சரி அனைத்து வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு என்ன வேலை ? அதற்க ஐஜியாக உள்ள துக்கையாண்டிக்கு என்ன வேலை ?

என்ன வேலை என்று சொல்கிறேன். துக்கையாண்டி சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஐஜியான நியமிக்கப் பட்டதும், குற்றப் பிரிவு சிஐடி ஐஜி பிரிவையும் கூடுதலாக கவனிப்பார் என்ற வினோதமான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அந்த நேரத்தில் தான், சிபி.சிஐடியின் புலனாய்வுக்கு, தங்க நாணய மோசடி விசாரணைக்கு வந்தது.

அதில் எவ்வளவு பணம் புழங்கியது என்பதும், ஒரு சாதாரண ஆய்வாளர் ஒரே பேரத்தில் 50 லட்ச ரூபாய் வாங்கியதும் அறிந்திருப்பீர்கள்.

அப்போது துக்கையாண்டி சிபி.சிஐடி ஐஜியாக பொறுப்பு வகித்தார் என்பது சிறப்பு.

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தவுடன் துக்கையாண்டி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?

லஞ்ச ஒழிப்புத் துறையின் 27வது கட்டிடத்திற்கு பின்னால் ஒரு பேட்மின்டன் கோர்ட்டும், ஃப்ளட் லைட்டும் போட்டதுதான். இதில் என்ன தவறு, ஒரு ஐஜி விளையாட்டு ஆர்வலராக இருக்கக் கூடாதா என்று கேட்பீர்கள். இருப்பது தவறில்லைதான். இந்த பேட்மின்டன் கோர்ட்டும், ஒளி விளக்குகளும், அரசின் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்டது என்பதுதானே வேதனை.

மாலை நாலரை மணிக்கெல்லாம், ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்களோடு, பேட்மின்டன் விளையாட்டு தொடங்கும். லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, ஏறக்குறைய சீட்டாட்டக் கிளப் போல, ஓய்வெடுக்கும் மடமாக மாறி விட்டது.

இரவு ட்யூட்டி இல்லை. பந்தோபஸ்து இல்லை. சனி ஞாயிறு விடுமுறை. மாதந்தோறும் 20 சதவிகிதம் பொய் பயணப் பட்டியலை அரசே வழங்குகிறது. இது போக, மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும், ரகசிய நிதியிலிருந்து ஒரு பங்கு. மொபைல் பில் கட்ட மாதந்தோறும் 1000 ரூபாய். லஞ்ச வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கூறும் ஒரு அரசு. திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இருக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் பெயரைச் சொல்லி மாமூல் வாங்கும் ஒரு உளவுத் துறை ஐஜி என்று நாடு போய்க் கொண்டிருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சீட்டாட்டக் கிளப்பாக மாறியதில் ஆச்சர்யம் என்ன ?

கடந்த ஐந்து வருடமாக தலைமையக டிஎஸ்பியாகவும், இப்போது கூடுதல் எஸ்பியாகவும் இருக்கும் கிருஷ்ணா ராவ் என்ற நபர், இந்த ஐந்து வருடங்களாக ஒரு வழக்கை கூட விசாரித்ததில்லை என்பது தெரியுமா ? எப்போது பார்த்தாலும் கதவை அடைத்துக் கொண்டு போன் பேசுவதும், இயக்குநர் வந்தால், அவர் கார் கதவை திறந்து விடுவதையும் தவிர, இந்த நபர் வேறு எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், வாரம் முழுவதும், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், வேப்பம்பட்டு, திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி போன்ற இடங்களுக்கு வழக்கு புலனாய்வு நிமித்தம் சென்று வந்ததாக பொய் டி.ஏ தவறாமல் போட்டு வருகிறார். இப்படி உழைக்காமல் உடம்பை வளர்க்கும் இந்த மனிதருக்கு தின்னும் சோறு எப்படி செரிக்கிறது என்பதுதான் ஆச்சர்யம்.

துக்கையாண்டிக்கு வாரம் முழுவதும் வேலை என்ன தெரியுமா ? காலை 11 மணிக்கு அலுவலகம் வருவது. ஒன்றிரண்டு கோப்புகளை பார்ப்பது. அந்த கோப்புகளில் சம்பந்தப் பட்ட தலித் அதிகாரிகள் இருந்தால் அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது. 11.30 மணிக்கு இவரைப் போலவே மற்றொரு சீட்டாட்டக் கிளப் தலைவர் நல்லமா நாயுடு இவர் அறைக்கு வருவார். திமுக மீண்டும் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் விவாதிப்பார்கள். இந்த ஜெயலலிதாவை ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்பார்கள்.

12..30 மணி முதல் தேவேந்திரக் குல வேளாளர் சங்கம் என்று சொல்லிக் கொண்டு ஜாதி சங்கத்தினர் வரிசையாக, மாநாடு, காதுகுத்து, தீமிதித்தல் என்று வரிசையாக வருவார்கள். அனைவரிடமும் உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசுவார்.

மதியம் கருமம் பிடித்த கமாராஜ் போன்ற நபர்கள் வந்தால் அவர்களோடு மதிய உணவு. மதிய உணவு முடிந்ததும், போட்டா கோர்ட்டின் வழக்கறிஞர் வெங்கடகிருஷ்ணன் என்பவர் வருவார். அவரோடு மற்றொரு நபர் வருவார். இவர்கள் மூவரும் இணைந்து இரண்டு மணி நேரம் வெட்டி அரட்டை அடிப்பார்கள்.

நாலு மணிக்கு துக்கையாண்டி அய்யா கிளம்பி, ஜிம்கானா கிளப்புக்கோ, காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கோ அல்லது டென்னிஸ் விளையாடவோ சென்று விடுவார். மாலை நாலு மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்.

இவரது வீடு பனையூரில் உள்ளது. இவரது மனைவிக்கு வேலையே பனையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுதான். முதலில் ஒரு நிலத்தை விலைக்கு வாங்குவது. பிறகு அந்த நிலத்தின் அருகாமையில் உள்ள நிலத்தை லேசாக ஆக்ரமிப்பு செய்வது. அருகாமையில் உள்ள நிலத்துக் காரர் ஏதாவது பேசினால், காவல்துறையை விட்டு மிரட்டுவது. அந்த ஆக்ரமிப்போடு சேர்த்து, அதிக விலைக்கு விற்பது. இதுதான் திருமதி.துக்கையாண்டியின் முழு நேர பணி. இதற்கு உதவி செய்வது மணி. Money அல்ல Mani.

துக்கையாண்டி அலுவலகத்தில் மணி என்ற ஒரு காவலர் இருக்கிறார். இவர் எண்ணூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர். ஆனால் அங்கே ஓ.டி என்கிற அயல்பணி என்ற கணக்கு காண்பித்து விட்டு, முழு நேரமும், துக்கையாண்டி மற்றும் திருமதி.துக்கையாண்டியின் ரியல் எஸ்டேட் பணிகளை மட்டுமே கவனிப்பது இவரது பணி.

இந்த மணி துக்கையாண்டி வந்தவுடன், அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை பற்றிய விபரங்களை சம்பந்தப் பட்ட விசாரணை அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தை ஒரு அதிகாரி பார்த்து விட்டு, துக்கையாண்டியிடம் புகார் சொல்லுகிறார். இதற்க துக்கையாண்டியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ? “அப்படியா ? “ என்பதுதான்.

துக்கையாண்டி பல்வேறு வழக்குகளில் தலையிட்டு அதன் முடிவுகளை மாற்றுமாறு வற்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மகாகவி பாரதி நகரில் ஒரு காவல் ஆய்வாளர் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கில் புலனாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கை புலனாய்வு செய்யும் அதிகாரியை அழைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பதிலாக துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறு துக்கையாண்டி வற்புறுத்தியதாகவும், அந்த புலனாய்வு அதிகாரி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு பெண், 600 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தப் பெண்ணின் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைந்து, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்த நிலையில், இவர் தன்னை பணி இடைநீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார். இந்தக் கோப்பு துக்கையாண்டியை வந்தடையும் போது, பணி நீக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவிடுகிறார்.

மற்றொரு தலித் அதிகாரி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் தொடங்கப் படாத நிலையிலேயே அந்த அதிகாரி பணி இடைநீக்கத்தில் இருந்து விடுவிக்கப் பட வேண்டும் என்று கோரிய போது, துக்கையாண்டி, அவரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப் பட்ட துறைக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று பொறி வைத்துப் பிடிப்பது போன்ற புகார்கள் வந்தால், முதலில் பிடிக்கப் பட வேண்டிய நபர் எந்த ஜாதி என்பதை கேட்டறிந்து, அந்த அதிகாரி தலித் சாதியாக இருந்தால், நடவடிக்கை எடுக்க துக்கையாண்டி அனுமதி மறுப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து பல்வேறு தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாவதாக அத்துறையின் சில ஊழியர்களை இடமாற்றம் செய்ததும், ஒரு ஊழியரை பணி இடை நீக்கம் செய்ததும் நடந்திருக்கும் சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியே, ஒரு பத்திரிக்கை ஆசிரியரிடம், அதுவும் ஒரு மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்கு விடை தர வேண்டிய போலா நாத், துக்கையாண்டியின் அரசியல் செல்வாக்கை பார்த்து அஞ்சி நடுங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த துக்கையாண்டி, பகுதி நேரமாக ஐஜியாக இருந்து கொண்டு, முழு நேரமாக ஸ்ரீராம் சிட் பண்ட்ஸில் பங்குதாரராக இருக்கிறார் என்பது உபரித் தகவல் (துக்கையாண்டி சார், சவுக்குக்கு லோன் வாங்கித் தர்றீங்களா ? பணத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு)

இப்போது நம்ப கமாராஜ் விஷயத்துக்கு வருவோம். கமாராஜ் பேரு அவ்ளவா நல்லா இல்லை. குருமாராஜ்னு வச்சுருவோமா ? சவுக்குக்கு பிடிச்சுருக்கு. சவுக்கு வாசகர்கள் தான் இந்த பேருக்கு ஒப்புதல் தரணும்.



இந்த குருமாராஜ் தன்னோட மனைவி பேர்ல, சென்னை திருவான்மியூர்ல இரண்டு க்ரவுண்ட் நிலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் வாங்கியிருப்பது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.



இந்த நிலத்துக்கான மொத்த தொகை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து எண்ணூறு மட்டும். இந்தத் தொகையை மொத்தமாக செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் ஒதுக்கீடு பெரும் முன், வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கீடு பெரும் நபர் தர வேண்டிய உறுதி மொழி, பின் வருமாறு.

“எனக்கோ / எங்களுக்கோ / எங்களைச் சார்ந்திருக்கின்ற 21 வயது நிரம்பாத (Minor) குழந்தைகள் பெயரிலோ சொந்த வீட்டு மனையோ/வீடோ/அடுக்குமாடி குடியிருப்போ, இந்தியாவில் உள்ள மாநகராட்சி, முதல் நிலை சிறப்பு நிலை (நகராட்சி) நகராட்சிகளில் / இல்லை என்று உறுதி கூறுகிறோம். “

என்ற கணவன் மனைவி இரண்டு பேரும் கையொப்பம் போட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



ஆனால், 10 ஜனவரி 2005ல் 1424 சதுர அடி உள்ள ஈஸ்வரி அபார்ட்மென்ட்ஸ், முதல் தளம், பீச் ஹோம் அவென்யூ இரண்டாவது தெரு, பெசன்ட் நகர் என்ற முகவரியில், 22,50,000 ரூபாய்க்கு வாங்கி, அதில்தான் இப்போது காமராஜ் குடும்பத்தோடு குடியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.









இவ்வாறு பொய்யான சான்றிதழ் கொடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தையும், அரசையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டிருப்பதன் மூலம், குருமாராஜும் அவர் மனைவி ஜெயசுதாவும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, கண்ணாயிரத்துக்கு விரைவில் ஒரு புகார் அனுப்பப் பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆண்டிக்கும் அரசனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போது புரிகிறதா சவுக்கு வாசகர்களே ?
சவுக்கு

35 comments:

  1. Where is the MK's rule countdown you coward? :) :) :)

    ReplyDelete
  2. தோழர் சவுக்கு அவர்களே,
    இந்தவார நக்கீரனில் கேபியின் வாக்குமூல கதைகளை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் பல இடங்களில் அவர்களால் கேபியின் வாக்குமூலத்தை முழுமையாக வெளியிட முடியவில்லை. ஏனென்றால் போலிபாதிரி ஜெகத் கஸ்பார் மூலம் தேசியத் தலைவரின் மரண சர்ச்சையை பலமுறை பணம்பண்ணும் நோக்குடன் எழுதிய பெருமை நக்கீரனையே சாரும். திருடன் காலில் தேள் கொட்டியது போல் உணர்ந்தாலும், வெளிகாட்டி கொள்ளாமல் தங்களுக்கு பிடித்த சில பகுதிகளை மட்டும் கேபியின் பேட்டியிலிருந்து கிடைத்ததாக வெளியிட்டிருந்தார்கள். பல கட்டுக்கதைகளுக்கு நடுவே ஒரு உண்மையையும் வெளியிட்டிருந்தார்கள். அதாவது நெடுமாறன் அய்யா அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு அவர் "நக்கீரன் பத்திரிக்கை "ரா" வின் ஊதுகுழல்" எனக்கூறி மறுத்துவிட்டதாகவும் வெளியிட்டிருந்ததுதான். இதைப்பற்றியும் ...இதனுடன்
    தமிழ்மையம் என்றபெயரில் போலிபாதிரி ஜெகத் கஸ்பர், கனிமொழியுடன் கூட்டுசேர்ந்து நடத்தும் மரத்தான் கொள்ளையை மீண்டுமொருமுறை விளக்கமாகவும் விபரமாகவும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. டாப் கிளாஸ்! வெல்டன் சவுக்கு!

    ReplyDelete
  4. கவுண்டவுன் எங்கே போனது என்று நான் உட்பட பலர் கேட்கிறோம்.. ஆனால் நீங்க பதிலை சொல்லாமல் மிக கவனமாக தவிர்ப்பது தெரிகிறது.. அதற்கான பதிலை உங்களிடமிருந்த எல்லோரும் எதிர்பார்ப்பது பிழையொன்றம் இல்லையே.....?

    ReplyDelete
  5. well done savukku. savukkin sattaiyadi thodarattum

    ReplyDelete
  6. Weldone savukku

    You have a Good Evidence With you.

    Please Do and Book case against Him.

    MayBe BJP party You can contact they Will Help You.

    ReplyDelete
  7. //கமாராஜ் பேரு அவ்ளவா நல்லா இல்லை. குருமாராஜ்னு வச்சுருவோமா ? சவுக்குக்கு பிடிச்சுருக்கு. சவுக்கு வாசகர்கள் தான் இந்த பேருக்கு ஒப்புதல் தரணும்.//

    கோல்மால்ராஜ்'னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும் யுவர் honour

    ReplyDelete
  8. also make your investigation about pondicherry ex-chief minister Rangasamy's corruption, i heard once he have sex with actress meena, in Annamalai hotel, and he refuse to pay room rent to that hotel, when they ask for rent, immediatly he purchase that hotel, we need some clear investigation about it please savukku.

    ReplyDelete
  9. DEAR SAVUKKU, YOU ARE DOING SERVICE TO SOCIETY,
    WE PEOPLE ARE MORALLY SUPPORTING YOU.
    COUNT DOWN IS NOT A BIG ISSUE. WHEN SAVUKKU IS TALING ABOUT CONSPIRACY AND CORRUPTION, WHO IS ASKING THE COUNT DOWN (EVEN THOUGH IT WAS CLARIFIED EARLIER). WE WANT TO KNOW WHETHER THE ANANYMOUS OFFICER IS SUPPORTING THE CORRUPTION?
    GOPALASAMY. SAUDI ARABIA.

    ReplyDelete
  10. kurumaraj nalla irrukku. antha name continue pannalam. avarum kuruma mathiri than irukkar

    ReplyDelete
  11. நல்ல பதிவு வாழ்த்துக்கள் . தாங்கள் மிகவும் கஷ்டா பட்டு சேகரித்த பத்திரங்களை வைத்து இவர் (குருமாராஜு) மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை . ஏன் என்றால் தமிழ்இன துரோகிஜின் காலம் அல்லவா இது.

    ReplyDelete
  12. சம்பந்தப்பட்டவர் குறித்து எழுதும் போது, சாதி வெறி என்று மட்டும் எழுதுங்கள். எந்த சாதி என்கிற தகவல் வேண்டாம். காரணம் வம்பை விலை கொடுத்தும் வாங்கும் மேல் மட்ட ஊழல்கள் குறித்து எழுதுகிறிர்கள். அதை குறிப்பிட்ட சாதிக்கு எதிரான விசயமாக திசை திருப்பக்கூடிய அபாயம் உள்ளது.

    மேலும் சவுக்கு அவர்களுக்கு, தங்கள் வலைத்தள முதன்மை பக்கத்தில் ஒரே ஒரு இடுகை மட்டும் தெரிவது போல் அமைத்தால், வேகமாக உங்கள் தளம் திறக்கும். மேலும் மொபைல் போனில் வாசிப்பது எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  13. one more anonymous....

    Savukku, don't get fed up by the scathing comments of some fellow anonymous people with regard to disappearance of count down. In my view when you are providing very serious information on many corrupt officers and have the guts (be it right or wrong) to criticise those in power even braving their powerful backlash. That counts while the count down don't. If you can lessen even an iota of your trouble, by avoiding unnecessary count down, a fun indeed, we would support it.

    ReplyDelete
  14. Complied and only one post per page comrade.

    ReplyDelete
  15. சவுக்கு உங்களுடைய எல்லா பதிவுக்கும் நன்றி.தெரியாத உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ஆனால் இந்த பதிவில் தலித்சாதி வெறி என்று பதிவுசெய்து இருக்கிறீர்கள் இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சாதியை எல்லோரும் பார்க்கிறார்கள் அதில் இவரை மட்டும் குற்றம் சொல்லுவது ஏன்.போலிஸ்காரர்களின் வர்க்கமே ஊழலில் ஆனாது.அது தன்சுயநலத்திற்காக எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யும்,அதில் சாதி வெறி என்று தலித் மீது பொதுவாக சொல்லுவது ஏற்புடையது அல்ல.அவரையும் அவர் சாதியையும் சொல்லுவதில் தவறில்லை.ஆனால் தலித் சாதிவெறி என்று சொல்லி இருக்கிறீர்களே,அது வன்மையாக கண்டிக்கதக்கது.

    ReplyDelete
  16. தெரியாமல்த்தான் கேட்கிறேன் கருணாநிதி செய்யும் தில்லுமுல்லுகளுக்கும் பேசும் பேச்சுகளுக்கும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் வழக்கு போடுவதற்கு வழியிருப்பதாக சில இடங்களில் நியாயமிருக்கிறது, உதாரணத்துக்கு, 1) 2009 ம் ஆண்டு ஏப் 27 இலங்கையில் போர்நிறுத்தம் கோரி ''கண்டச்சனி'' கருணாநிதி 3.1/2 மணிநேரம் உண்ணாவிரதமென்று மக்களை ஏமாற்றி ,ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தவறானதகவக் கொடுத்து ஏமாற்றியதால் ஏப், 2009, 27,28,29, மூன்று தினங்களிலேயே 3,000,லிருந்து 10,000 மக்கள் கொல்லப்பட்டனர்,1,000 க்கு மேற்பட்ட குழந்தைகள் அடக்கம், 2) இன்னுமொரு சந்தற்பத்தில் கருணாநிதி (வடக்கத்திய ஆங்கிலத்தொலைக்காட்சியான M.T.V.என்று நினைக்கிறேன் நேர்காணலின்போது போலிப்பாதிரியின் கூட்டாளியான கருணாவின் மூன்றாம் தாரத்தின் மகள் கனிமொழி சகிதம்) தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு கேள்விக்கு ஆங்கிலத்தில்,pirabakaran is not terrorist ,He is my friend என்று பதிலளித்தார் இந்தப்பேச்சு தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சேராத சேர்த்தியா, சீமானுக்கு பொருந்துவது தமிழ்நாட்டைப்பொறுத்தவரை ஊழல்மோசடி குற்றவாளிகளான முதலமைச்சு பதவி வகிப்பவர்களை அணுகாதா நெருங்காதா, தயவுசெய்து யாராவது முன் வருவீர்களாக இருந்தால், மலேசிய அறிஞ்ர்+ தமிழ் உணர்வாளர், பி. ராமசாமி, அவர்களுடனும் ஆலோசித்து, ஜெ,ஜெயலலிதாவும் கருணாநிதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமெனெ கூறியிருக்கிறார், எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் ப்ரீட்சார்த்தமாக ஒரு வழக்கை போடலாம், மக்களுக்குபுரியவைக்கலாம், மேற்கொண்டு சர்வ தேச நீதிமன்றத்திற்கும் எடுத்துச்செல்லலாம், யாராவது தமிழகத்தில் முன் வரும் பட்சத்தில் ஐரோப்பாவிலிருந்து சகல ஆதரவும் தருவதற்கு ஈழத்தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்,

    ReplyDelete
  17. டியர் சவுக்கு,
    எவ்வளவு நாள்தான் எழுதி கொண்டே இருக்க போகிறீர்கள் , எழுத்துதான் மிக பெரிய ஆயுதம் என்பதுவும் தெரியும் அனால் அடுத்த முதல் அமைச்சராக இன்னொருத்தன் வந்தாலும் வேறு அதிகாரிகள் வந்தாலும் , இதே கொடுமைதான் தொடர போகிறது , அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை அவர்களை பற்றி என்ன எழுதினாலும் அவர்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை ,
    தானே ஒரு பெரிய கள்ளனாக இருக்கும் பொது தனக்கு கீழ் இருக்கும் ஒரு கள்ளனை என்ன செய்ய முடியும் ?, தான் ஆட்சில் இருக்கும் வரை தான் களவாடி கொண்டோ இருக்கு அவர்களின் உதவி இவனுக்கு வேண்டும், இது தான் இன்றைய மற்றும் இந்திய நிலைமை.
    இதை எப்படி மற்ற போகிறோம் , உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னை, உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்
    தேவை பட்டால் உங்களோடு கை கோர்க்க தயாராக இருக்கிறோம்.

    ReplyDelete
  18. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்திடம் இதைப் பற்றி கேட்க முடியுமா ?? என்பதை தெரிவிக்கவும்...தகவல் அறியும் உரிமைப் பற்றியும் சாதாரண பொது மக்கள் அதை எப்படி பயன்படுத்து என்பது பற்றியும் ஒரு பதிவு போடலாமா ?

    ReplyDelete
  19. இங்கு வரும் எல்லோரும் உங்களை கேள்வி கேட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ளவும், ஒரு பரபரப்பான செய்தி படிக்கவும், உங்களை எப்போது போலீஸ் கைது செய்யும் அதை எப்போது நியூஸ் 'ஆ படிக்கலாம் என்றுதான் வருகிறார்கள். தயவு கமென்ட் moderation போடுங்கள் தேவை இல்லாத கேள்விகளை அளித்து விடுங்கள் உங்கள் எழுத்தின் மரியாதை கூடும்

    ReplyDelete
  20. சவுக்கிற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நிறைவேற்றுவீர்களா?

    தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் மூன்று பேருக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இதைப் பற்றிய பலரும் கலைஞர் டிவியில் பேட்டி கொடுத்தார்கள். அதுவரை சந்தோஷம்.

    அதே போல, தா.கிருட்டிணன் கொலையாளி யார்? அந்த வழக்கு என்ன ஆயிற்று?

    மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தில் மூவரைக் கொலை செய்தவர்கள் யார்? அந்த வழக்கு என்னவாயிற்று என்று வாசகர்களுக்கு தெரிவிக்க முடியுமா?

    இந்த வழக்குகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன? மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்குமா? கிடைக்காதா? சவுக்கு தெளிவாக்குமா?

    ReplyDelete
  21. Repost as there were no answers from you side!!!?? Have you started following MK's style?!!
    "தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி."!!??

    என்ன நடக்குது இங்கே ?

    சவுக்கு வேஷம் கலஞ்சு போச்சு என்று 'அதிர்ஷ்ட அனா ' சொல்லும் அளவுக்கு என்ன நடக்கிறது ! உங்கள் வாசகர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுங்கள் !
    கவுன்ட் டவுன் எங்கே ?!!(you have answered for this) ஏன் கருணாநிதிக்கு ஆதரவான பேச்சு ?
    வைகோ ,திருமா ,விஜயகாந்த், சீமான் என்று எல்லோர் முகமூடியும் கிழிந்து தொங்கி விட்டது! சவுக்கு தான் இருக்கிறதே என்று நினைத்தால் ...முடிவில் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது !
    இதுக்கு 'அதிர் அனா ' போல் 'குஞ் ந ' வாக இருந்து விடலாம் !
    அதிர் அனா குறிப்பிடுவது உங்கள் பார்பன ஆதரவு நிலைப்பாடோ ...அதுவும் சரியோ என்றும் தோன்றுகிறது !?? தெளிவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறோம் !
    -Vazhuthi

    ReplyDelete
  22. Dear Savukku anna,

    Your blog is super.Dont fear about anything.Because we are there in your backside.Now karunanidhi age is 85.In 1947 his age should be around 20 . then why he didnt fight for freedom in young age.Most of the freedom fighters are teenagers.Can you write one special Independence day post regarding this.Then only most of people know about this...

    ReplyDelete
  23. நித்தியானந்தாவின் போர்னோகிராபி படங்களையும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதையும் செய்தியாக்கி பணம் பண்னும் பத்திரிக்கை பிராத்தல் குரூப்பிற்கு மோசடி டிக்ளரேஷன் கொடுப்பதா பெரிய வேலை? கருணாநிதியின் ப்ராடு தனங்களுக்கு ஒத்து ஊதும் இந்த பத்திரிக்கைகளை வாசகர்கள் புரிந்து கொண்டு ஒதுக்க வேண்டும்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. சமீப காலமாக உலா வரும் பரபரப்பு வலைத்தளம் பற்றி போலீஸ் மாநாட்டில் பேச்சு எழுந்ததாம். அப்போது, முதல்வர் முன்னிலையிலேயே இரண்டு முக்கிய அதிகாரிகள் கசப்பு வார்த்தைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி இருக்கிறார்கள். அவர்களைக் கண் அசைவில் அடக்கிய முதல்வர், 'எனக்கு எதுவும் தெரியாதுன்னு சிலர் நினைக்கிறாங்க. எல்லாத்தையும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்' என பக்குவமாக
    எச்சரிக்கைவிட்டாராம்!'

    சவுக்கு தளம் பற்றித்தான் பேசியிருக்கிறார்கள் என்று தகவல்கள் சொன்னார்கள். வெற்றி உங்களுக்குத்தான்.

    கரப்ஷன் காவல்துறை அதிகாரிகள் தண்டனை பெற வேண்டும். காமராஜ் பத்திரிக்கை இழுத்து மூடப்படல் வேண்டும். ஏனென்றால் இந்தப் பத்திரிக்கை ஏகப்பட்ட பேரங்களில் தலையிடுகிறதாம்.

    முதல்வருக்கு ஜால்ரா அடித்தே அந்தப் பத்திரிக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதாவது பரவாயில்லை, முதல்வரின் பெயரையும் அல்லவா சேர்த்துக் கெடுக்கிறார்கள். முதல்வர் இதை கண்டுகொண்டால் பரவாயில்லை.

    ReplyDelete
  26. கவுண்டவுன் எங்கே போனது என்று நான் உட்பட பலர் கேட்கிறோம்.. ஆனால் நீங்க பதிலை சொல்லாமல் மிக கவனமாக தவிர்ப்பது தெரிகிறது.. அதற்கான பதிலை உங்களிடமிருந்த எல்லோரும் எதிர்பார்ப்பது பிழையொன்றம் இல்லையே.....?

    ReplyDelete
  27. pukalanthi ayya virkku mallakalin adayathai alikka vendum yendu nookamoo?

    ReplyDelete
  28. வணக்கம் சவுக்கு சார் ... ஏன் மிக தாமதமாக பதிவுகள் வருகுறது.. ஏதாவது பிரச்சினையா ??? தயவு செய்து தெரிவிக்கவும் ..

    ReplyDelete
  29. கவுன்ட்டவன் எங்கே ???? பதில் சொல்லுங்க சார் ??? ப்ளீஸ் ..

    ReplyDelete
  30. கோவை இணை ஆனயரை பற்றி நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை .ஆயுவ் செய்தால் சென்னை விட அதிக உழல விஷயம் தெரியும் .இவரால் பேரூர் கோயில் திருப்பணி பலமுறை தள்ளி விடுப்பது. கோவை மண்டலத்தின் பல கோயில்களில் இவரது திருவிளையாடல் உண்டு. கண்டந்த 2 நாளாக எங்கள் அபிசே கதிகலங்கி எழுதியவன் யார்?? என்று தேடுதல் வேட்டை நடக்கிறது .நன்றி.

    ReplyDelete
  31. என்ன சார் உங்கள பத்தி போலீஸ் மாநட்ல பேசினதா, ஜூனியர் விகடன்ல எழுதி இருக்காங்க

    ReplyDelete
  32. Dear savukku
    haven't you ever visited any village and seen the plight of dalits there?then how come coin a word DALIT JAATHI VERI?i feel very sad to say this. i too belong to police department and a dalit when i happened to see an official for clearing a false remark on me he advised me to see some officers of my caste what do you say about this? as a matter of fact many dalit officers pose to be honest to subordinates and do the opposite to higher officials and politicians.i want a word from you in this regard as you have very highly placed sources in the department.

    ReplyDelete
  33. இந்த வர ஜூவி கழுகார் செய்தி:

    ''சமீப காலமாக உலா வரும் பரபரப்பு வலைத்தளம் பற்றி போலீஸ் மாநாட்டில் பேச்சு எழுந்ததாம். அப்போது, முதல்வர் முன்னிலையிலேயே இரண்டு முக்கிய அதிகாரிகள் கசப்பு வார்த்தைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி இருக்கிறார்கள். அவர்களைக் கண் அசைவில் அடக்கிய முதல்வர், 'எனக்கு எதுவும் தெரியாதுன்னு சிலர் நினைக்கிறாங்க. எல்லாத்தையும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்' என பக்குவமாக எச்சரிக்கைவிட்டாராம்!''

    அதோடு, றெக்கையை விரித்தார் கழுகார்!

    சவுக்கு அவர்களே வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் மட்டும் இல்லை இதன் மூலம் உங்கள் சமூக கடமையும் பொறுப்பும் உங்கள் மீதான எங்கள் எதிர் பரப்பும் கூடி விட்டது .

    ReplyDelete