உடன்பிறப்பே,
நெடுநாட்களாக உனக்கு கடிதம் எழுதாமல் இருந்தேன். ஆனால் எழுதியே தீர வேண்டிய சூழலை சில குடிலன்கள் உருவாக்கியுள்ளதால், உன்னை இக்கடிதம் வாயிலாக சந்திப்பதைத் தவிர வேறு என்ன வழி ?
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழக மக்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி உண்டு, இலவச வண்ணத் தொலைக்காட்சி கண்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் நலம் கொண்டு, எனக்கு அளிக்கிறார்கள் மலர்ச் செண்டு. இதை குலைக்க வருகிறது மவுண்ட் ரோடு வண்டு.
சமீப காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளை நீயும் கவனித்திருப்பாய் என்று நினைக்கிறேன். கழக அரசு ஏதோ பத்திரிக்கையாளர்களை அடக்குவதாகவும், மிரட்டுவதாகவும், ஒடுக்குவதாகவும், ஓட ஓட விரட்டுவதாகவும் திட்டமிட்டு விஷமத்தனம் பரப்பப் பட்டு வருகிறது என்பதை நீ அறிவாய். பொய்யாலும் புரட்டாலும் தமிழகத்தை இருட்டுக் கூடாரமாக வைத்திருக்க வேண்டும் என்று புறப்பட்டுள்ளார்கள் சில புல்லுருவிகள்.
ஆற்காடு வீராச்சாமி இருக்கும் போது, புதிதாக எதற்காக தமிழகத்தை இருளில் ஆழ்த்த வேண்டும் ? வேறு எந்த மாநிலத்திலும், நாட்டிலும் இல்லாத வகையில் கழக ஆட்சியிலேதான் இருட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சரை ஏற்படுத்தி வைத்திருக்கிறானே இந்தக் கருணாநிதி ! பிறகெதற்கு இப்படி ஒரு பதர்களின் கூட்டம் தலைகொழுத்து ஆடுகிறது ?
கருணாநிதி ஆட்சியிலே வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டார்கள், நீதிபதிகள் தாக்கப் பட்டார்கள், உழைப்பாளர்கள் தாக்கப் பட்டார்கள், உத்தப்புரத்திலே தலித்துகள் தாக்கப் பட்டார்கள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டார்கள், என்று கூக்குரலிடுகிறார்களே !!! இவர்கள் கூற்றிலிருந்தே புரியவில்லையா, இந்தக் கருணாநிதி பாரபட்சமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் தான் தாக்கியிருக்கிறான் என்று.
அந்த அம்மையாரைப் போல பாரபட்சமாக நடந்து கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவனல்ல நான். அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்க்கவுமில்லை, பெரியார் அதை எனக்கு கற்றுக் கொடுக்கவுமில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதையும் இந்த பதர்கள் அறியவில்லை.
பதவி போய் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது பாருங்கள்.. … எத்தனை பாசத்தோடு இந்தக் கருணாநிதி பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று. 2001 முதல் 2006 வரை, பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றியும், பத்திரிக்கையாளர்கள் அடக்கப் படுவது பற்றியும் நான் பேசாததையா இன்று கூக்கூரலிடும் நரிகளின் கூட்டம் பேசி விட்டது ?
பொட்டு என்பவர் யார் ?. என்னைப் போலவே பிற்பட்ட வகுப்பில் பிறந்து, சமுதாயத்தில் முக்கியப் புள்ளியாக உயர்ந்து நிற்பவர். அந்தப் பொட்டை திருஷ்டிப் பொட்டாகச் சித்தரித்து எழுதியிருக்கிறது இன்று புதிதாக அவதாரம் எடுத்திருக்கும் அண்ணா சாலை ஆரியக் கூட்டம்.
தமிழகத்திற்கே விடிவெள்ளியாக விளங்கும் அஞ்சா நெஞ்சனின் கரத்தை மதுரையில் மட்டுமல்லாமல், கொடை ரோட்டிலும் வலுப்படுத்தும் அன்பு இளவல் பொட்டின் நெற்றிப் பொட்டில் தாக்குவது போலல்லவா எழுதியிருக்கிறார்கள் ?
என் அன்பு மகனைப் பற்றியும் அன்பு மகனுக்கு பொட்டு செய்யும் சேவையை இந்த குள்ளநரிகளால் செய்ய முடியுமா ? கொடை ரோடு முழுவதுமே சொல்லுமே பொட்டின் சேவைகளை.. … … … .. .. .. .. . ..
இன்று இல்லாமல் இருந்தாலும் என்றுமே என் அன்பிற்குரிய பிரபாகரனுக்கு ஒரு பொட்டு அம்மான் போலத்தானே என் அன்பு மகனுக்கு இந்தப் இந்தப் பொட்டு. அந்தப் பொட்டை போற்றும் அண்ணாசாலை ஆரியக் கூட்டத்திற்கு மதுரைப் பொட்டு வேப்பங்காயாய் கசப்பதேன் ? விளக்கெண்ணையாய் இருப்பதேன் ? அவர் பிற்பட்ட வகுப்பிலே பிறந்து, முற்பட்ட வகுப்பினருக்கே சவால் விடும் வகையில் வளர்ந்திருப்பதால் தானே ?
இன்று என் ஜால்ராவாக மாறியிருக்கும் அன்பு உடன்பிறப்பு கலைஞானி கமலஹாசன் அன்றே பாடியிருக்கிறாரே “சாந்துப் பொட்டு, ஒரு சந்தனப் பொட்டு “ என்று. கலைஞானி மட்டுமா ? கண்ணதாசனும் “பொட்டு வைத்த முகமோ“ என்று அருமை பொட்டைப் பற்றி பாடியிருக்கிறாரே .. … …
கர்நாடக கண்மணி அருமை நண்பர் முரளியும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா“ என்று பாடியிருக்கிறாரே ?
ஆனால் இந்த அண்ணா சாலை ஆரியக் கூட்டம் இந்தப் பாடல்களையெல்லாம் கேட்காமல், பொட்டுவை ஏதோ ஸ்டிக்கர் போட்டு போல எழுதியிருக்கிறார்களே கழுகார் என்ற பகுதியில்… அந்தக் கழுகின் சிறகை உடைக்க வேண்டாமா ? அந்த கழுகை கழக உடன்பிறப்புகள், புறநானூற்று புலிகளைப் போல புறப்பட்டு புசிக்க வேண்டாமா ? புரட்டி எடுக்க வேண்டாமா ? அதைத்தானே அறிவித்தார்கள் ஒரு விளம்பரம் மூலமாக .. … ? இதில் என்ன தவறு இருக்கிறது ? இதற்கு அய்யோ அய்யய்யோ என்று கூப்பாடு போடுகிறார்களே ?
என்றுமே நான் “செய்வதைச் சொல்வோம், சொல்வதைச் செய்வோம்“ என்றுதானே சொல்லி வந்திருக்கிறேன். செய்யப் போவதை வாயால் சொல்லாமல், ஒரு பத்திரிக்கையின் வாயிலாக விளம்பரம் மூலமாகச் சொல்வது ஒரு நற்பண்பன்றோ ?
உண்மையைச் சொன்னால் அடித்துஉதை; அதை
முன்கூட்டியே தினமலர்வழிச் சொல்
என்று அய்யன் வள்ளுவரே தெரிவித்திருக்கிறார். அந்த அய்யன் வழி வந்தவனல்லவா நான் ?
அந்த அம்மையார் கட்சியினர் மட்டும் மூன்று மாணவிகளை எரித்துக் கொலை செய்து விட்டார்கள், கழகம் இது போல் ஏதாவது செய்யாவிட்டால், நாளை கழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இது அமைந்துவிடும் என்பதற்காகத் தானே தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் அதே போல், மூன்று பேரை எரித்துக் கொன்றனர் அன்பு உடன்பிறப்புகள் ? அன்று தினகரன் அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து எழுதிய ஏடுகள், “திடீரென உள்ளே புகுந்த“ “திடீர் தாக்குதல்“ என்றல்லவா எழுதின ?
அதுபோல ஒரு அவச்சொல் வரக் கூடாது என்பதற்காகத் தானே பத்திரிக்கையில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. வரப் போகிறோம். தரப் போகிறோம் என்பதை அருமை நண்பரின் உதவியோடு அருமையான விளம்பரமாக தந்திருக்கிறோம்.
ஒரு செய்தி ஆசிரியரின் கைது தினமலர் நாளேட்டை எப்படி வழிக்கு கொண்டு வந்திருக்கிறது பார்த்தாயா உடன்பிறப்பே ? இதே போல அண்ணா சாலை ஆரியக் கூட்டத்தையும் வழிக்கு கொண்டு வருவது எனது கடமை அல்லவா ? அந்தக் கடமையை செய்யத் தவறினால் கருணாநிதி கடமை தவறிய கயவன் என்று வரலாறு வையாதா ?
நான் என்ன இந்தப் பத்திரிக்கைகளை எழுத வேண்டாம் என்று தடுக்கிறேனா ? எதிர்க்கிறேனா ? இவர்களுக்கு செய்தி தரவேண்டும் என்பதற்காகத் தானே தினமும் ஒரு பாராட்டு விழா, திறப்பு விழா, திருமண விழா, திரைப்பட விழா என்று கலந்து கொள்கிறேன். இவர்களுக்காகத் தானே தினமும் ஒரு அறிக்கை விடுகிறேன். இவர்களுக்காகத் தானே என் குடும்பத்தினரையும் தினமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளேன் ?
இதைப் பற்றியெல்லாம் எழுதாமல், தப்பும் தவறுமாக, அந்த அம்மையார் விடும் அறிக்கைகளையெல்லாம் வெளியிடுவதும் உண்மையை மறைக்கும் வேலை தானே ? பொய்யை வாரி இறைக்கும் காரியம் தானே ?
பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இன்னும் இந்த பத்திரிக்கைகளை எல்லாம் சொந்தமாக வாங்காமல் இருக்கிறேன்.
நானே ஒரு பத்திரிக்கையாளன் ஆகையால், இந்த விகடன், குமுதம், தினத்தந்தி, தினமணி, தினமலர், கல்கி, போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளையும் நானே சொந்தமாக வாங்கி, அதில் என்னைப் பற்றி நானே அத்தனை பக்கங்களையும் எழுதி நிரப்ப வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் அவாவை, பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் ஒத்தி வைத்திருக்கிறேன். ஆனால், இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடிக்கு என்னைத் தள்ளுவது போலத்தானே இருக்கிறது இந்த விபீடணர்கள் நடத்திய செவ்வாய்க் கிழமை கூட்டம் ?
தினமலர் குழுமத்தைப் போன்ற பிற்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்து முன்னேறியவர்களும், இந்து ராம் போன்று, தாழ்த்தப் பட்ட சமூகத்தின் பிறந்து முன்னேறியவர்களும் இருப்பதால்தானே, இன்று இந்த பார்ப்பனர்களின் கூட்டத்தை அடக்கி வைக்க முடிகிறது ? இந்த பார்ப்பனர்களின் சதிச் செயலை, முரசொலியிலே தொடர்ந்து “காதற்ற ஊசி“ எழுதி வருவதை நீ படித்திருப்பாய் என்பதை நான் அறிவேன் உடன்பிறப்பே.
கலைஞானி நடித்த சலங்கை ஒலி படம் பார்த்திருப்பாய். அந்தப் படத்திலே ஒரு காட்சி. நடனமாடிக் கொண்டிருக்கும் கலைஞானியை ஜெயப்ரதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது திடீரென்று மழை வரும். அந்த மழையில் ஜெயப்ரதா நனைவார். அப்போது, ஜெயப்ரதா தலையில் விழுந்து நெற்றியில் வழிந்து, ஜெயப்ரதாவின் பொட்டை மழை நீர் அழிக்க எத்தனிக்கும் போது, கலைஞானி ஓடிச் சென்று அந்த பொட்டு அழியாமல் காப்பார்.
அது போலத்தானே அன்பு உடன்பிறப்பு பொட்டுவை அழிக்க துடிக்கிறார்கள். கலைஞானி போல, வேகமாகச் சென்று தடுக்க முடியாது என்றாலும், மெதுவாகச் சென்றாவது, பொட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டியது எனது கடமை அல்லவா ?
பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காது இருந்தால், சோடையாகி விட்டான் தமிழன், சோரம் போய்விட்டான் தமிழன், சோதாக்களின் கூட்டத்திலே ஒருவனாகி விட்டான் தமிழன், தன் சுகமொன்றே போதுமென்று சுயமரியாதை இழந்து விட்டான் தமிழன் என்பது உறுதியாகி விடாதா ?
இந்நிலை உறுதியாகி விட்டால், அண்ணாசாலை ஆரியக் கூட்டம் இன்னும் வேகமாக சுழற்றும் வாளை, பொட்டுவைப் பற்றி எழுதி நிரப்புவார்கள் தாளை, இதைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறானா, பொட்டு என்ற காளை ?
இதயத்தில் பதிந்திருக்கிற கொள்கைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றுகிற கடமையை கழக அரசு செய்துள்ளது என்பதற்கான சான்றுதானே தினமலர் விளம்பரம் ?
ப்ரஸ் கிளப்பில் விபீடணர்கள் கூடி நடத்தும் போராட்டத்தை, ஜிம்கானா கிளப்பிலும், காஸ்மாபாலிடன் கிளப்பிலும், முடித்து வைக்கத் தெரியாதா இந்தக் கருணாநிதிக்கு ? அண்ணா சாலை ஆரியக் கூட்டம் என்னிடம் சரணடைந்து பேச்சு வார்த்தைக்கு நேரம் கேட்டிருப்பதை போராட்டம் நடத்தும் அந்த விபீடணர்கள் அறிவார்களா ?
அன்புடன்
மு.க.
சவுக்கு
ennamo nadakkuthu,
ReplyDeletemarmama irukkuthu.
பொட்டு-ல அடித்த மாதிரி சொல்லிட்டீங்க ! ! !
ReplyDeleteசவுக்கு-க்கு நாளுக்கு நாள் வாசகர் கூட்டம் அதிமாகிக் கொண்டிருக்கிறது ! !
சவுக்கு தளத்தை பழ.கருப்பையா நடத்துகிறாரோ என்று அடிக்கடி சந்தேகம் வருகிறது :-)
ReplyDeleteyar intha pottu?... puriyala...
ReplyDeleteஸ்பெக்டரம் ஊழலில் ஆ.ராசா தப்பிக்க முடியாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
ReplyDeleteசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழலாக கருதப்படுகிற ஸ்பெக்டரம் ஊழலில் தொடர்புடைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது, கிரிமினல் வழக்கு தொடர பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனுமதி கோரி கடிதம் எழுதி பல மாதங்கள் ஆகியும், இதுவரை பதில் வரவில்லை.
இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு வரும் 18ஆம் தேதி வருகிறது. வழக்கில் ஆ.ராசாவை விசாரிக்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா தப்பிக்க முடியாது. இந்த வழக்கு முடிந்த பின்னரே காமன்வெல்த் ஊழல் தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
நக்சல்களை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரியாக செயல்படவில்லை என்றார்
After common wealth scam Subramaniam swamy may take up Jaffar Sait case. Hope Savukku team keeps in touch with him for exposing the criminals in tamilnadu
ஏதோ ஒன்று குறைகிறது
ReplyDeleteபோட்டு தாக்குங்க....
ReplyDeleteIthu sema punchu !! but do u really think intha kelapayyan kudumba arasiyala matha poranu ?
ReplyDeletenice and a real letter!!!
ReplyDeleteyaaru paa intha poittu??????
சவுக்கே பிழை பொருத்தருள வேண்டும். தருமிக்கு தோன்றியுள்ள மிகப் பெரிய சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்.
ReplyDeleteதருமியின் சந்தேகங்கள் : 1. ஜூவியின் கட்டுரை என்ன ? 2. தினமலரின் விளம்பரம் என்ன ?. இவைகளை அறிய முடியாத 'தரித்திர' தருமியின் ஆவலை தீர்த்து வைக்கின்றீர்களா ?
தருமி
////பதவி போய் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது பாருங்கள்.. … ////
ReplyDeleteஇவர் அமர மாட்டார். பேரசிரியர் அன்பழகன்தான் அமருவார். இவர் சட்டசபைக்கு வந்து வெறுமனே கையெழுத்து மட்டும் போட்டு விட்டு செல்வார்.
a very good imitation.nice article.all the best.but beware!doors of puzhal prison will be opened for you again.
ReplyDeleteதயவு செய்து நெற்றிகண்ணை திறந்த காமராஜ் நக்கீரன் காமராஜ் என்றோ வேறு எதாவது பெயரோ இடவும் கர்மவீரர் காமராஜர் என்று இட வேண்டாம் அது பெருந்தலைவரை அவமதிப்பது போல் உள்ளது
ReplyDeleteFrom JV
ReplyDeleteவழக்கு தள்ளுபடி!
'முதல்வரின் 3 நிழல்கள்...! நீதி மன்றப் படியேறும் நில விவகாரம்!' என்ற தலைப்பில் சமீபத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கும் பாண்டியன், வினோதன், கணேசன் ஆகியோருக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது குறித்தும், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டிருப்பது குறித்தும் எழுதி இருந்தோம்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குவீட்டு மனை ஒதுக்கப்பட்ட விவகாரம்குறித்து விசாரணை நடத்தி டி.ஜி.பி. கடிதம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப் படையில் தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரமே இல்லை எனத் தெரிகிறது' எனச் சொல்லி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றார்கள்.
Enna achu?
Sir blog is very nice to read.
ReplyDeleteSir don't write கர்மவீரர் காமராஜர் just write Nakkeeran காமராஜர்
Thanks
Samy
//Enna achu?//
ReplyDeleteகுழந்தை அழுது.. குழந்தைகுட்டி எல்லாமே அழுது..!
வாழ்க செம்மொழி
ReplyDelete===============
செத்துக்கொண்டிருந்த தமிழை
சினவெடுத்த தோள் கொண்டு
சிவக்கவைத்த செம்மல் நீங்கள்,
சிறப்பின்றி சிதையவிருந்த தொல்காப்பியத்தை
களை நீக்கி, பூங்காவனமாய்
திருத்தி எழுதிய நவயுகத்தின் சிற்பி நீங்கள்.
http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
அ,நக்கீரனாரால் ஆங்க்காங்கே
குற்றம் குத்திக்காட்டப்பட்டாலும்
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத குலக்கொழுந்து நீங்கள்,
தமிழ் எவரைக்கைவிட்டிருந்தாலும்
தமிழை உங்கள் காலடியில்
மண்டியிட வைத்த கல் நெஞ்சர் நீங்கள்,
பொல்லா உலகத்தில்
புகழுக்காக அலையாமல்
புகழையே பிடித்து போடாவில் போட்ட புலி நீங்கள்,
எப்பாடுபட்டாவது
ஈழ்த்தமிழர் வாழவேண்டுமென்பதற்காக
அதிகாலையில் ஐந்து மணிக்கு எவருமறியாமல்
தன்னந்தனியாக
தள்ளுவண்டி உதவியோடு
சாகும்வரை தண்ணீருடன் உணவொறுத்து
மத்திய அரசை மண்டியிட வைத்த
மரம் போன்ற உறுதி கொண்ட மாமணி நீங்கள்,
அனைத்துகட்சியையும் ஓரணியாக்கி
மனிதச்சங்கிலியாய் டில்லிக்கு இழுத்துச்சென்று
ஈழத்தமிழருக்காக
மன்மோகனையும்,சோனியாவையும்
மிரட்டிய இரும்பொறை நீங்கள்,
தமிழ் நாட்டுத்தமிழன் தமிழிலேயே பேசவேண்டுமென்பதற்காக
இறுமாப்போடு வேறு எவரையும் தெரிவுசெய்யாமல்
நீங்கள் பெற்ற பிள்ளையென்றுகூட பார்க்காமல்
ஆங்கிலம் தெரியாத அழகிரியை
ஆட்சியாளர் மத்தியில் அரசசபையில்
தமிழில் பேசவைத்த மனுநீதிச்சாணக்கியன் நீங்கள்,
சன் ரீ வீ தமிழுக்கு சதி செய்தபோது
தமிழன் கலை கண் மூடிவிடக்கூடாது என்பதற்காக
கட்டுக்கடங்கா காட்டாறாகி, கடலலையென எழுந்து
கலைஞர் ரீ வீ யை தோற்றி கலங்கரையாக்கி
மானாட மயிலாட மூலம்
தமிழ் மானங்காத்த எட்டாவது அதிசயம் நீங்கள்,
ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பை
தேர்தல் நேரத்திலாவது இல்லாதொழிக்க
உங்கள் குணத்துக்கு மாறாக தந்திரமாக
ஈழத்தமிழனுக்கு எதிரிபோல் நடித்து
பாசாங்கு செய்த பழந்தமிழ் பண்பாளன் நீங்கள்,
ஒருவனுக்கு ஒருத்தியென்றால்
அவன் பெண்ணை அடிமையாக்கிவிடுவான்
என்ற தூர நோக்கோடு துவண்டெழுந்து
பெண் விடுதலையின் பிம்பமாய்
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை தூரவீசி
மூன்றுக்கு மேற்பட்ட
மோகினிகளுக்கு வாழ்வளித்த முழுவேந்தன் நீங்கள்,
பெற்ற பிள்ளைகளை
பிணக்கின்றி சொகுசாக வாழ வைக்கும் உலகில்
பெற்றோரின் சுயநல வழக்கை உடைத்து
பெற்ற பிள்ளைகளனைத்தையும்
ஊருக்கு உழைக்க வைத்த உத்தமர் நீங்கள்,
கோவிலாக இருந்த கோபாலபுரம் வீட்டை
கொஞ்சம் கூட யோசிக்காமல்
ஹொஸ்பிற்றலுக்கு கொடையீந்த குபேரன் நீங்கள்,
முந்நூறென்ன மூவாயிரம் கோடி செலவானாலும்
முத்தமிழ் வளரவேண்டுமென்பதற்காக
சொத்து சுகங்களை மறந்து
செம்மொழி மாநாடு நடாத்தும்
துரியோதனன் போன்ற காரியவாதி நீங்கள்,
எவரை தமிழ் கைவிட்டிருந்தாலும்
உங்களை வாழவைத்த
செம்மொழி வாழ்க,
தமிழில் முக்குளிக்கும்
உங்களை மூதேவிகள் எவர் வைதாலும்,
வரலாறு வாழ்த்தத்தவறினாலும்,
தமிழ் உங்களை வாழவைக்கும்,
வாழவைத்துக்கொண்டிருக்கிறது,
வாழ்க தமிழ்த்தாய்,
வாழ்க தமிழ்த்தாய் நாடு,
நீடூழிவாழ்க என் தமிழ் உறவுகள்,
ஈழத்து எதிலி
-------------------
Could you please investigate the bio data of Rasa the great of Spectrum.I hear so many stories about his relation ship with Muthuvel Karunanidhi,the kaliyuga dasarathan
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை...வார்த்தைக்கு வார்த்தை எள்ளல் துள்ளி விளையாடுகிறது. அற்புதம். இதை வாசித்த உடன்பிறப்புகள் தற்கொலை செய்யாது இருந்தால் பெரிய விடயம்.
ReplyDeleteநான் புது வாசகன், அணைத்து பதிவுகளையும் வாசித்தேன்.
ReplyDeleteபதிவுகள் அனைத்தும் ஒரு பக்க சார்பாக இருப்பதாய் தோன்றுகிறது..
உங்கள் சாட்டையை பாரபட்சம் இன்றி சுழற்றவும்.
நன்றி..
சோனியா, சிதம்பரம், கருணாநிதி போர்க்குற்றவாளிகள் ? : பேராசிரியர் ராமசாமி
ReplyDeleteமன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி போர்க்குற்றவாளிகள் ? : பேராசிரியர் ராமசாமி
இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்த மலேசியா ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி ராமசாமி,கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் நடந்த ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை,தாம் மற்றும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோரை உள்ளடக்கிய பிரத்தியேக குழு மேற்கொள்ளும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில்,இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும், வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர். படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு,ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது.
சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு, ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது.அந்த குழுவின் விசாரணையில் தமிழர்களுக்கு நீதிகிடைக்காது என்பதே கடந்தகால அனுபவம்.
இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கை இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி, விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்.
எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம்,
இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது.
uthasooriyan kudumba sooriyan aagi sooriyakuadumbam aghiyathu,Thalaivarum Thasarathan aanar.Raman,Lashmanan,Barathan agitru,Satrugnan?Evargal Dasarathanin moonru manaivigadidam vanthavargal.AAnal Dasarathanukku 10000 manaivigal.Nam thalaivargu?Nade Sooriyan agivittathu.Eni puthiya Soorian yarenum varuvargala?
ReplyDeleteதருமியின் சந்தேகங்கள் : 1. ஜூவியின் கட்டுரை என்ன ? 2. தினமலரின் விளம்பரம் என்ன ?. இவைகளை அறிய முடியாத 'தரித்திர' தருமியின் ஆவலை தீர்த்து வைக்கின்றீர்களா ?
ReplyDeleteennakkum ithae doubt? pls clarrify...
ayya thangalin karruthukkal attanaiyum unmai. Anaal kalaigar mattume thappu panuvathu polavum matravargal ellam uthamargal polovum ungal vimarsanagalil therikirathu. Annaithu katchikalin mugamudikalaiyum kiliungalen please.
ReplyDelete