மீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது. கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி. காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது. பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி. இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.
அதற்கு முக்கிய காரணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான். ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை. கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை.
அதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.
அந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன். இவரின் இயற்பெயர் அஷோக் குமார். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். பெயருக்கேற்றார் போல இனியவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
சவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார். அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார். சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார்.
மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர். மதியம் உணவு உண்ண காசு இருக்காது. மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம். வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார். ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.
இதுதான் இனியவன். அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது. பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.
அமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ராஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார். போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார். செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.
இப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே… ?
செங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.
நேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார். அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.
அங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார். எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“ என்கிறார். உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “ என்று கேட்கிறார். இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார். இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.
அப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா ? “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா ? ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் ? அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர். நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“ “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.
பிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி. பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள். இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.
இரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
நீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன். உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.
இனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது. தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார். காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது. அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா ?
ஆனால் மாணவர்கள் மசியவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை. சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
இதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார். அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
இனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
மூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார். விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.
நீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. என்ன தெரியுமா ? ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா ? லேசான காயத்தை ஏற்படுத்தவது. இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.
ஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.
இந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே ? இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை. ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன. இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.
இது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா ?
இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ? ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ? என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.
அவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.
இப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?
போராட்ட காட்சிகள்
சவுக்கு
மிகவும் கொடூரமான செயல். இந்த காட்டுமிரன்டிகளிடம் நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்காது. ஆயுதம் ஏந்தி போராடினால் மட்டுமே இவர்களை திருத்த முடியும். தயவு செய்து சவுக்கை படிக்கும் அனைவரும் கொஞ்சம் சிந்திங்கள்.அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம். இவர்களை இப்படியே விட்டால் இலங்கை தமிலர்களைபோன்ர நிலைமை தன் நமக்கும்
ReplyDeleteமிகவும் துணிச்சலான என் மதிப்பிற்குரிய சவுக்கு இணையத்தையும் நிர்வாகத்தையும் தலைவணங்கி தொடர்கின்றேன்!, அந்தச்செய்தி மிகுந்த கொதிப்பையும் எரிச்சலையும் உண்டாக்கியது , இனியனுடன் எங்கள் ஈழமக்கள் சார்பில் வேதனையை பகிர்ந்து கொள்ளுகின்றோம், புலம்பெயர் தேசங்களில் பல இணையத்தளங்கள் வாயிலாக கருணாநிதியின் அட்டூழியங்களை எங்களால் முடிந்தளவு அம்பலப்படுத்திக்கொண்டுதானிருக்கிறோம், முக்கியமாக தமிழக மக்கள்தான் ஒரு மாற்றத்தை கூடியவிரைவில் கொண்டுவரவேண்டும், அதுவரை சவுக்கும் வேறுபல இணையங்களும் செய்யும் சேவை மகாத்தானது, புலத்தில் தினமும் எதோ ஒரு செய்திமூலம் கருணா தோலுரிக்கப்பட்டாலும் எந்தச்சலனமும் வெட்கமும் இல்லாமல் தனது கரி வேலையைச்செய்தும் கொண்டுதானிருக்கிறார், இந்தச்செய்தியையும் அம்பலப்படுத்த முயற்சி செய்கிறோம்
ReplyDeleteதீரமிக்க சகோதரன் இனியனுக்கு, உணர்வுள்ள தமிழன் என்ற முறையில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். தற்கொலை முயற்சியை நீங்கள் கையில் எடுத்தது மிகவும் கண்டனத்திற்கு உரியது என சகோதரர் சவுக்கு சொல்லியிருப்பதை நான் நூற்றுக்கு நூறு ஆமோதிக்கிறேன். ஒருவேளை நீங்கள் தற்கொலை செய்திருந்தால், அது உங்கள் குடும்பத்தாருக்கும், நீதி நேர்மைக்காக போராடும் எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கும், எங்களைப் போன்ற சகோதரர்களுக்கும் எவ்வளவு பெரிய இழப்பாகும் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தீர்களா? அதைவிட முக்கியம் என்னவென்றால் உங்களைத் துன்புறுத்திய காவல் நாய்களுக்கு (நேர்மையான காவல் துறையினர் மன்னிக்கவும்) இதுபோல் வேறு ஒருவரையும் நாளை துன்புறுத்தக் கூடிய தைரியத்தைக் கொடுத்துவிடும் அல்லவா?
ReplyDeleteமுன்னைவிட பெரும் சக்தியோடு மீண்டும் நீங்கள் காலத்தில் இறங்கி, சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் கூட்டத்திற்கு ஆப்படிக்க வரும் நன்நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் சகோதரன்.. சிங்கம்.
" நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது."
ReplyDeleteநன்றாக சொன்னிர்கள் சவுக்கு அண்ணா
இனியன்,சமூக போராளிகளுக்கு தற்கொலை அழகில்லை....
well savukku.appreciate you.but you need to bring out more more more.god bless you.how is iniyan condition now?
ReplyDeleteகருணாநிதி ஆட்சி முடிய countdown போடுகிறீர்களா.
ReplyDeleteதலைவரை ஆறாம் முறை ஆட்சியில் அமர்த்துவோம்
Sir,
ReplyDeleteEven if each law college student spreads message of Savukku against Karuna Misrule and eelam sufferings it will reach nook and corner.Advocates,students can also reach the masses. Also please meet BJP,RJD,ShivSena, Janata Dal United national leaders and present the case. The whiplash of Savukku must be heard in Delhi
If Tamilnadu fails this time to remove the family rule then there will be permanent darkness
robin
Savukku Sir,
ReplyDeleteIniyan did not attempt suicide because he is coward. But when police make him naked and kick his chest and harass the family it is only natural for him to take impulsive action.
But young men must remember that like MGR in Enga veetu Pillai Savukku and their team will help to use their Saatai to help the poor and the unfortunate victims
Robin
aaram murai illai veetil aaara amara vaikka pokiraarkal em thamilaka makkal ithu marukka iyala niyathi
ReplyDeleteஇந்தச்சம்பவம் நெஞ்சை மிகவும் கசக்கிப் பிழிந்து விட்டது.காரணம் இதையொத்த வன்முறையால் ஈழத்தில் என் தம்பியைப் பறிக்கொடுத்தவன் நான்.ஆனாலும் இனியவனின் உடனொத்த சட்டக்கல்லுரி மாணவர்களின் கடமையுணர்ச்சி பெருமையடையச் செய்கிறது.
ReplyDeleteவேலியே பயிரை மேய்க்கின்றது என்பதற்கு மற்றொரு உதாரணம்.
சேகுவேராவின் உரிமைப் போராட்ட அறைகூவல் சவுக்கில் பளிச்சென்று தெரிகின்றது.
அந்தப்பணியை தலைவணங்குகிறேன்.
The government pleader and public prosecutor P Kumaresan, however, told the court that the student was thrashed by the public as he had misbehaved with women aboard a city bus. A case was registered against him, but he was let on bail on own bond, they said, adding that he later got himself admitted in the government hospital, where he attempted to commit suicide. He is in intensive care unit at present, it was submitted.
ReplyDeleteசவுக்கு ,எது உண்மை என்பதை விசாரித்து போடுங்கள் pls.போலீஸ் மேல் எப்பவும் எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை ...ஆனாலும் செய்தியின் authenticity should be known.
thanks,
Vazhuthi
http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-raps-students-for-going-on-strike/articleshow/6333373.cms#ixzz0x1TbIGGY
நீங்கள் காவல்துறையைக்கூட சட்டை செய்யாமல் விட்டுவிடலாம்... இன்றைய தினமலரின் கடைசிப்பக்கத்தை பாருங்கள்..உங்கள் செய்தியை மிக மோசமாக திரித்து கேவலபடுத்தி வெளியிட்டுஇருக்கிறார்கள்..பார்ப்பன திமிர் பிடித்த தினமலரின் அயோக்கியத்தனத்துக்கு சவுக்கு சீக்கீரம் சாட்டைய
ReplyDeleteIs Iniyan the hunter or the hunted?
ReplyDeleteThere are three different versions about the bus incident in newspapers.
1. Iniyan misbehaved with a woman.
2. He was a ticketless traveller.
3. He fought with a passenger.
What is the truth?
Everybody wants to know
Is Iniyan the hunter or the hunted?
ReplyDeleteNewspapers three versions: He misbehaved with a woman; he was a ticketless traveller and he had a tiff with a passenger. What is the truth?
மனித உரிமை மீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
ReplyDeleteதமிழ்நாடு காவல்துறை தான் இருக்கிற மட்டமான துறை.மொதல்ல காவல்துறையை செவுளுளில் அறைகிற மாதிரி ஒரு துறை உருவாக்கணும்.
ReplyDeleteஅப்பதான் அடங்குவானுங்க
:(
ReplyDeleteகொடுமையான நிகழ்வு.. தவறு செய்தவர் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் அசிங்கங்கள் இருக்கும்வரை எதுவும் ஓயப்போவதில்லை.
சீக்கீரம் நீங்கள் சாட்டையை வீச வேண்டும்....
ReplyDeleteவணக்கம் சவுக்கு
ReplyDeleteநான் நெடு நாட்களாக உங்களை படித்து கொண்டு வருகிறேன்
ஆனால் உங்கள் இந்த கட்டுரை மதிப்பு அளிக்குமாறு இல்லை அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்கும்
சட்ட கல்லூரி மாணவர்கள் இப்படி போராட்டம் நடத்தி மக்களை கஷ்ட படுத்த கூடாது காவல் துறை தவறு செய்தால் கமிஷனர் அலுவலகம் முன்னால் போராட்டம் நடத்துங்கள் ஆனால் மக்களை பாதிக்குமாறு ரோடு மறியல் செய்யாதிர்கள்
இதனால் சட்ட கல்லலூரி மாணவன் என்றால் ரௌடி என்று அனைவரும் நினைத்து விடுவார்கள்
நன்றி ஸ்ரீனிவாசன்
Hi savukku
ReplyDeleteI have read the news in maalaimalar.com. The news was hidden news, and comments were worst. One person has commented that mr.ashokkumar was teasing a girl. Is it true? I have posted your post, without your permission. Some one should explain these things to the common men. They are all believe the general news papers.
//“பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு
ReplyDeleteபாத்தீங்களா ?//
தலைநகரிலேயே இது போன்ற வசுவுகள்...அதுவும் ஆதிதிராவிடரின் சம்மந்தி ஆட்சியிலே....!
அம்மா ஆட்சியிலும் இதே காட்சிகள்தான்...!!
எக்காலத்தும் தலித் மக்கள் முன்னேறுவதை ச்னாதனப் பத்திரிக்கை முதல் சமத்துவம் பேசும் பெரியார் வரை விரும்புவதே கிடையாது.
இதுபோல் அதிகார ஓநாய்கள் குதறிய தலித் ஆடுகள் ..அனேகம்... அனேகம்...
சாதியைச் சொல்லித்திட்டும் அதிகாரி(நா)யை தண்டிக்க சட்ட்த்தில் இடம் உள்ளதா? என ஆராய்ந்து போராடல் வேண்டிய கட்டாயம் ”சவுக்கு”க்கு உண்டு
savukku...now u started doing a good job rather than targetting particular personalities.nothing will happen to Iniyan.dharmam oru pothum saagaathu.thamizhagaththin thalaiyezhuththu maarum.kaaththiruppom.
ReplyDeleteSavukku and team are only trying to exaggerate events and incidents to destabilize the State. Lawyers and Law Students have become lawless and that's the reality. They are law unto themselves and well protected by the Judicial system. They harbor criminals and anti-social elements. Attempt to disturb the peace and tranquility of the State by such false propaganda will be detrimental to all in the long run. The day is not far when people will start fighting the lawyers who make the life of people miserable.
ReplyDeleteஎன் கமென்ட் இன்னும் பிரசுரம் ஆகவில்லை
ReplyDeleteஸ்ரீனிவாசன்
டேய் சவுக்கு , பணத்துக்காக ஒட்டு போடும் என் ரதத்தின் ரத்தமான தமிழ் உடன்பிறப்புக்கள் இருக்கும் வரை நீ எவ்வளவு கத்துனாலும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது... ...என் ஆட்சியும் தொடரும் , காவல் துறை வெறியாட்டமும் தொடரும்...
ReplyDeletei strongly condemned the police atrocity police personnel should be dealt with an iron hand they should rooted out by ARUN ADVOCATE
ReplyDeleteDon't you ever think how much people got affected due to this student dhurna?? If your family member got struck up in traffic at that time, how will you feel?? The action of police should be condmened, but this is not the way to protest against it by staging non-sense dharna... Any protest without affecting common people is welcome decesion...
ReplyDeleteஇங்கு தலித் என்பது அல்ல.இவர்களின் காட்டுமிராண்டி ஆட்சியை எதிர்க்கும் எல்லோருக்கும் இது தான் கதி. இன்றைய காவல் துறை அதிகாரிகளின் குடும்பத்துக்கும் நாளை இது போல் நேரலாம். கருணாநிதி குடும்பத்துக்கும் வரலாம்.காத்திருப்போம் அந்த காட்சிகளை காண....
ReplyDeleteSavukku,
ReplyDeleteThanks for the information.We believe in the authenticity of your news.
-Vazhuthi
One suggestion which can be easily implementable ( ie technically ) and have huge implication on such a events is e-governance. Once FIR are to be made online and visible to anyone high in the authority and subset of it even for public how can such fabrication occur.
ReplyDeleteEven if hundreds of savukku raise up to the situation is impossible to avoid such atrocities completely( no offence meant i sincerely admire savukku). But what i want is a fool proof process which makes such events a very unlikely ones.
Savukku ,
ReplyDeleteA Request .
1. There should be a way to subscribe to ur post through email.Following blog has it http://www.themoneyquest.com/ and it works fine.People need not come and check if you written a post.Instead they will be intimated when ever you post new one.
2. There are buttons to share fb/orkut/buzz etc. Add those too
regards
Premkumar
poi seidhi parappuvadhilae ungalukku appadi enna aanandham...
ReplyDelete"சட்ட கல்லூரி மாணவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை பற்றி வருத்தப்படும் வாசகர்களுக்கு",
ReplyDeleteபோராட்டம் என்பது யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நடத்திகொல்வதல்ல
இவ்வளவு பெரிய போராட்டம் செய்தும் (பாரிஸ் கார்னர் முழுவதும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி போக்குவரத்து ஸ்தம்பித்து போனது )
இந்த செய்தி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடிந்ததா?
பல பேருக்கு அப்படி ஒரு போராட்டம் நடந்ததாக கூட தெரியவில்லை?
இதில் அந்த போராட்டம் மக்களை போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாக்கியதாக குற்றசாட்டு வேறு?
இப்படியொரு போராட்டம் நடத்தியதால் தான் அன்றைக்கு பாரிஸ் கார்னர் நோக்கி சென்ற மக்களுக்காவது இந்த செய்தி சென்றது
அன்றைக்கு போக்குவரத்தால் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் என்ன சமுக சேவை செய்ய சென்றவர்களா என்ன!!
99 விழுக்காடு மக்கள் தங்கள் சொந்த வேலைக்காக தான் சென்றிருப்பார்கள்
இனியன் போன்ற ஒரு சமுக போராளிக்காக கொஞ்சம் போக்குவரத்து நெரிசலை பொறுத்துகொள்ளுங்கள், தவறில்லை.
ஓட்டு பொறுக்குவதற்காக ஜெயலலிதா நடத்திய போராட்டம் எல்லா மீடியாவிழும் வெளிவருகிறது
ஆனால் இனியவன் போன்ற தன் சக்திக்கு உட்பட்டு இந்த சமுகத்திற்க்காக பணி செய்ய தயாராய் இருக்கும சாதாரண மனிதனை அதே காரணத்திற்க்காக
சாவடி அடித்து, கொள்ளாமல் கொன்று போட்ட காவல் துறைக்கு எதிரான போராட்டம் எதிலும் வர வில்லை
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
"மரணம் எதற்குமே எப்போதுமே ஒரு தீர்வல்ல".
ReplyDeleteஇனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் : பொன்னிலா
ReplyDeletehttp://inioru.com/?p=16344