Sunday, August 22, 2010

சவுக்கை முடக்கு. அடுத்த திட்டம்.



சவுக்கை முடக்க அடுத்த கட்ட திட்டம் தயாராகி விட்டது என நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. கடந்த 10 நாட்களாகவே, சவுக்கின் கணினியை முடக்க பல்வேறு திட்டங்கள் உளவுத் துறையால் அரங்கேற்றப் பட்டு வருகின்றன.

முதலில் அவர்கள் கையாண்டது, வைரஸை அனுப்புவது. இந்த வைரஸ் வெற்றிகரமாக வெளியேற்றப் பட்டது. அடுத்ததாக, Browser hijacking முயற்சி செய்யப் பட்டது. இதற்கு அடுத்து, ரிமோட் கம்ப்யூட்டர் மூலமாக சவுக்கின் கணினிய ஹேக் செய்யப் பட்டது. இது அத்தனையும் வெற்றிகரமாக சவுக்கால் முறியடிக்கப் பட்டது.

தற்போது உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், சென்னை மாநகர ஆணையாளர் ராஜேந்திரனிடம் சொல்லி, சவுக்கையும், வழக்கறிஞர் புகழேந்தியையும், ஏதாவது ஒரு வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக உறுதியான தகவல்கள் வந்திருக்கின்றன.



எப்படி கைது செய்வது, என்ன வழக்கை போடுவது என்று கமிஷனர் ராஜேந்திரன் கடும் யோசனையில் இருப்பதாகவும், எப்படி இருந்தாலும் வரும் வெள்ளிக் கிழமைக்குள் கைது உறுதி என்றும் தகவல்கள் கூறுகின்றன. கைது நடவடிக்கை தவிரவும், சவுக்கு தளத்தை தடை செய்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திரன் சார். அந்த ஆளு ரொம்ப மெரட்டுனா பயப்படாதீங்க. ஜாபர் சேட் மனைவி மேல மோசடி புகார் இருக்குதாமே உங்ககிட்ட ? அதுல எப்ஐஆர் போடுவேன்னு பதிலுக்கு மிரட்டுங்க. உங்களப் பத்தியும் சவுக்கு தகவல் சேகரிச்சுக்கிட்டு இருக்கு சார். சீக்கிரம் உங்களை இந்த வார “சவுக்கு நட்சத்திரமா“ அறிவிக்கிறோம்.

ஜாபர் சார். எத்தனை வாட்டி சொன்னாலும் உங்களுக்கு மண்டையிலே ஏறவே ஏறாதா சார். இந்த மிரட்டலுக்கெல்லம் சவுக்கு டீம் அஞ்சாது சார். இந்த தளத்தை நீங்கள் தடை செய்தீர்கள் என்றால், அடுத்து savukku.in, savukku.info, savukku.org, savukku.tv அல்லது dubukku.net. dubukku.in, dubukku.info, dubukku.com என்று பல்வேறு பெயர்களில் வந்து கொண்டேதான் இருப்போம். சவுக்கு வெறும் தளமல்ல சார். இது மக்கள் இயக்கம். நல்லவர்களின் ஆதரவு சவுக்குக்கு எப்போதும் உண்டு. இது போல உண்மையை எழுதுபவனை தடை செய்தாலும் செய்வீர்கள், உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அப்படித்தானே ?



சவுக்கு உங்களை மாதிரி போறவன் வர்றவன்கிட்டயெல்லாம் காசு வாங்கறது கிடையாது சார். சவுக்குக்கு காப்பாத்தறதுக்கு பல கோடி சொத்தெல்லாம் கிடையாது சார். அதனால் தொடர்ந்து உங்களைப் பற்றியும், உங்கள் வண்டவாளங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருப்போம். உங்க ரூமிலே சவுக்கு ஒட்டுக் கேட்பு கருவி வச்சுருக்கறதா பேசிக்கறாங்களே உண்மையா சார் ?

வைகுண்டராஜனை கைது செய்வதற்காக உளவுத் துறைக்கு நியமிக்கப் பட்டு, பிறகு வைகுண்டராஜனோடு சமாதானம் பேசி, அதிகார மையத்திற்கு 20 கோடி, முதலமைச்சர் செயலாளர்களுக்கு தலா ஒரு கோடி கொடுத்து விட்டு, நீங்கள் 3 கோடியை ஆட்டையை போட்டீர்களே … … இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அரங்கநாயகத்திற்கு ஒரு கோடி கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள் ? அரங்கநாயகம் பணம் கேட்டவுடன் வெறும் 5 லட்சம் கொடுக்கிறீர்களே ? அவ்வளவு பேராசையா சார் உங்களுக்கு ?

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநர் போலாநாத். ஆனால் நீங்கள் அவர் பெயரைச் சொல்லி பணம் வாங்குகிறீர்களே ? நியாயமா சார். போக்குவரத்து அலுவலகங்களிலும், பதிவுத் துறையிலும், வணிகவரித் துறையிலும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகளை நடத்துகிறதென்று அந்தத் துறைகளைச் சேர்ந்த ஒரு குழு உங்களைச் சந்தித்து இனிமேல் அதிரடி சோதனைகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டதும், நீங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அடிக்கடி சோதனைகள் நடத்துவதால் அரசு ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள், இது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்று கருணாநிதிக்கு ஒரு குறிப்பு அனுப்பி விட்டு, இதற்கு பிரதி பலனாக மாதந்தோறும் ஒரு பெரும் தொகையை வாங்குவது கூட பரவாயில்லை. ஆனால், போலோநாத்துக்கும் சேர்த்து நான் வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த ஆளை ஏன் சார் தேவையில்லாம மாட்டி விடுறீங்க ? அந்த ஆள் வாங்கினால் பரவாயில்லை. வாங்காத ஆளு பேரை ஏன் இப்படி கெடுக்கறீங்க ?

நீங்க இதுல மட்டுமா சார் மாமூல் வாங்கறீங்க. மணல் அள்ளுபவர்களின் தலைவர் போலச் செயல்படும் கே.சி.பழனிச்சாமியின் மகனிடம் இருந்து ஒரு பெரும் தொகையை மாதந்தோறும் வாங்கிக் கொண்டிருக்கவில்லை ? உங்கள் வீட்டுக்கு மட்டும் அவர் மாதந்தோறும் 25 லட்சம் கொடுக்க வில்லை ?

பொறியியல் கல்லூரிகளின் அட்மிஷன் நடைபெறும் இந்த நேரத்தில் கல்வித் துறை அதிகாரிகளை விட்டு சோதனை நடத்தாமல் இருப்பதற்காக நீங்களும் கர்ம வீரரும் சேர்ந்து ஒரு பெரும் தொகையை வசூல் செய்யவில்லை ? உங்களிடம் பெரும் தொகையை கொடுத்த தைரியத்தில், பொறியியல் கல்லூரிகளில் வசூல் கொடி கட்டிப் பறக்கிறது தெரியுமா ?

டீசல் விலை உயர்த்தப் பட்டதும் சென்னை தவிர இதர நகரங்களில் ஓடும் தனியார் பேருந்துகள் அரசு அனுமதி இல்லாமலேயே, 50 காசுகளை கூடுதலாக வசூல் செய்வது தெரிந்து நீங்களும், கர்ம வீரரும், போலிப் பாதிரியும் இணைந்து 1000 பஸ் அதிபர்களிடம் இருந்து ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையயை போடவில்லை ?



விதிகளை மீறி கட்டப் பட்டுள்ள சென்னை நகரில் உள்ள கட்டிடங்களை இடிக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சென்னை மாநகராட்சி இடிப்பு நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதற்கு, இந்த கட்டிட உரிமையாளர்களிடம் நீங்களும் கர்ம வீரரும் ஒரு பெரும் தொகையை வாங்கவில்லை ?

இன்று ஜுனியர் விகடனை மிரட்டிக் கொண்டிருக்கும் பொட்டு சுரேஷ் மீது ரியல் எஸ்டேட்டில் பலரை மிரட்டுவதாக புகார்கள் வருவதாக கூறி, சுரேஷை மிரட்டி நீங்கள் ஒரு பெரிய தொகை பார்க்கவில்லை ?

லாட்டரி அதிபர் மார்ட்டினிடம், கருணாநிதியே வாங்கியிராத ஒரு பெரும் தொகையை நீங்கள் வாங்கவில்லை என்று கூறுங்கள் ?

இதையெல்லாம் எழுதினால், பொய் வழக்கு போடுவீர்கள். சிறையில் அடைப்பீர்கள். சித்திரவதை செய்வீர்கள்.



சவுக்கு சிறைக்கு போனால் போராளியாகத் தான் செல்லும். ஆனால் நீங்கள் சிறைக்கு செல்லும் போது திருடனாக உள்ளே செல்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் சர்வ வல்லமை படைத்த கடவுளுக்கு நிகரானவராக இருக்கலாம். ஆனால் மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமே இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்

பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன்

போடா போ

போடா.. போ..

சவுக்கு

33 comments:

  1. Dear Savukku,

    people are watching this (u/saukku.net/TN govt/jaffer) many(who doing illegal) are really scared on this issue. we are here to support u even any legal (i.e . illegal action taken on u). dont worry keep rocking.... savukku should beat all these dubuku...............


    mohanbabu

    ReplyDelete
  2. அதிகார வர்க்கத்தின் ஊழல்களை துணிச்சலாக வெளி கொண்டு வரும் சவுக்குக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. கொக்கு அடிக்க போயி காக்கா விழுந்திருச்ணா ? இப்போவே கண்ணே கட்டுதே......

    ReplyDelete
  4. Sir

    Jafar is looking like actor Mammooty . he can act in films instead of working in police dept.

    what he will do with those huge amount of money ???

    here we are working in the hot sun not even having our food and water for more than 15 hrs per day just to gain the monthly salary.

    And those police peoples are eating our money.

    It is all our fate.

    Savuku we are always with you

    continue writing

    ReplyDelete
  5. அண்ணே! தைரியமா எழுதுங்கண்ணே .....இன்னும் எத்தன நாளைக்கு அவங்களுக்கு அதிகாரம் இருக்க போவுது.....சீக்கிரமா ....உள்ள போயிடுவாங்க....ஆனா என்னக்கு ரொம்ப வெட்கமா இருக்குன்னே.....உங்களுக்கு உள்ள தைரியம் எனக்கு இல்லன்னே...ஆனா எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் உங்களுடன் நானும் சேர்ந்து போராட தயாராக இருக்கிறேன்...

    ReplyDelete
  6. பட்டையே கெளப்புங்க சவுக்கு
    நீங்கள் இப்ப தனி ஆள் இல்லை
    உங்களுக்காக ஒரு கூட்டமே இருக்கு

    ReplyDelete
  7. Savukku,
    You need to take these to the mass. Bloggers cannot and will not help. If possible, take the help of a political party.

    Take care

    Anony Munna

    ReplyDelete
  8. they will do whatever.savukku, you be very carefully.

    ReplyDelete
  9. 130 நாள்தான் சவுக்கு விடியலுக்கு

    ReplyDelete
  10. Nobody will give you serious attention for the following reasons

    1) Top Prabhakaran picture. Prabhakaran is a leader to only Srilankan tamils
    2) How do we know you are not blackmailing them
    3) Police can easily put you behind bars for false charges if they your identity. You mentioned that they know your identity.

    May be your website is fake to attract audiences

    ReplyDelete
  11. Dear Savukku Sir...
    Congraulation ! Great ! Hatts off to you.
    Now a days many people reading this blog after your arrest. So If you will go to Jail second time, Success for your hard work.Beocz morethan people get aware about this blog.If they block this blog come in another name and inform to the readers . At the same time do something to increase your readers all over the world . We are also know about your site after ur arrest only . So spread this blog like all Tamil newspapers which are available in free for browsers . It will accumulate "Makkal sakthi" behind you . Don't stop . Keep rocking.

    R.Jagan , Dubai.

    ReplyDelete
  12. Tamilnadu TV channels , newspapers and so called investication journals don't have backbone to publish about the corruption of rulers . They can't face even actors and businessmen even if they have enough proof against them . Just they are bother about their TRP rating and circulation . Only northindian TV channels like TIMESNOW , CNN IBN and TV9 of Andhra doing the job boldly . So we have to support " SAVUKKU " . Don't worry savukku team . We are always with you . Take care & keep rocking .

    R.Jagan , Dubai .

    ReplyDelete
  13. ரத்தம் கொதிக்கிறது எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை

    ReplyDelete
  14. //எப்படி கைது செய்வது, என்ன வழக்கை போடுவது என்று கமிஷனர் ராஜேந்திரன் கடும் யோசனையில் இருப்பதாகவும்//

    இதுக்கு எதுக்கு சார் கடுமையா யோசிச்சு இருக்குறா கொஞ்ச முடியயும் பிச்சிகிறீங்க??.பேசாம தாம்பரம் மார்க்கெட் ஆன்ட் போங்க அங்க ஒருத்தரு சவுகால அடிச்சிக்கிட்டே கடை கடையா காசு வாங்கிட்டு இருப்பாரு. கபால்நு பாஞ்சி சவுகைம் ,அந்த ஆளையும் அரெஸ்ட் பண்ணிடுங்க. சவுகுக்கு உடந்தைனு அவர் மேல ஒரு கேஸ் போட்டு வேலைய முடிப்பீங்கா எனனா நீங்க???

    Thanks,
    Kumar

    ReplyDelete
  15. Dear Savukku

    This is the critical Time so be carefull and do ur More than before. Form a Comiiteee this work should go without any Interfiance plz do te need full...

    ReplyDelete
  16. //டீசல் விலை உயர்த்தப் பட்டதும் சென்னை தவிர இதர நகரங்களில் ஓடும் தனியார் பேருந்துகள் அரசு அனுமதி இல்லாமலேயே, 50 காசுகளை கூடுதலாக வசூல் செய்வது தெரிந்து நீங்களும், கர்ம வீரரும், போலிப் பாதிரியும் இணைந்து 1000 பஸ் அதிபர்களிடம் இருந்து ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையயை போடவில்லை ?//

    உஸ்ஸ்.... இப்பவே ரெம்ப ஓவரா கண்ண கட்டுதே !!!

    ReplyDelete
  17. கொஞ்சம் கவனமாக இருங்கள் சவுக்கு.. தனி மனிதத் தாக்குதல் போலிருக்கும் வார்த்தைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம்.. பொதுநலன் கருதி எழுதுகின்றபோது அவையெல்லாம் நமக்குத் தேவையில்லாதது..!

    ReplyDelete
  18. தமிழ்நாட்டு காவல்துறையை மத்திய சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டின் வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் இத்தகைய ஊழல்கள் குறையும்.

    ReplyDelete
  19. Savukku,
    Please apply for anticipatory bail saying victimization for speaking truth. Whether bail is accepted or not Magistrate will ask the Govt to respond.Govt has to commit then.Get all national channels highlight the issue.
    Maintain contact with Leader of opposition so that matter can be raised in Lok Sabha.
    Only contacting people in Tamilnadu nothing can be achieved

    ReplyDelete
  20. We are with you! We are spreading the news of Savukku thru the strongest medium of todays' world: the internet! Long live savukku!
    -Vazhuthi

    ReplyDelete
  21. மிஸ்டர் சவுக்கு அவர்களே,
    இனிமேல் கருணாநிதியை குறிப்பிடும்போது, தமிழ் ஈனத் தலைவர் என்றும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொளகிறேன்.

    ReplyDelete
  22. Dear Savukku,
    I am a working a journalist for the past 20 years and I would not had supported this sort of writeups just few years back. But, yes, but, the big, I am supporting your writeups. Because these are all extradinary situations and extradinary situations need extradinary responses. When all the major news papers and tv channels have decided to lick Karunanidhi's feet and not even to publish even a letters to the editor piece or a small cartoon against Karunanidhi, we should need people like you. It may look like individual bashing, but it's not. Under no circumstances we shall allow an IG intelligence, who is the eyes and ears of the government to loot right, left and centre and fool the whole state. Keep going ... hats off

    R.Mani, Chennai

    ReplyDelete
  23. உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்

    //பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
    பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
    எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன்

    போடா போ

    போடா.. போ..// இதைபார்த்தால் சந்தோசமாவுமிருக்கு அதே நேரம் தேவையில்லாத மாதிரியுமிருக்கு,

    ReplyDelete
  24. ஜாபரையா? வருத்தமாயா?

    மாணத்த கப்பல்ல‌ ஏத்துராங்க, வண்டவாளம் தண்டவாளம் ஏருதுன்னு கவலப்படாதீங்கையா...
    மாணத்த பாத்தா நாம தெருவுக்கு வந்திருவோம்யா...
    மாணம் நமக்கெதுக்கியா வேணும், வேணும்னாலும் அல்லி வீசுனா அது கெடைக்காதுங்கலாயா?

    ஒரு புது மொழி சொல்றேன் கேலுங்கயா. நீங்க சீக்கிரமா டிஜிபியா (DGP) முன்னேறிடுவீங்க...
    "மாணம்ன்றது வெரும் உதாரு, பணம்னா நீங்க இருக்கனும் உசாரு"

    உங்க துறையிலிறுந்தே விசயத்தை கரக்குர, உலவு ம‌ண்ணன் சவுக்குதான் உங்க உளவு தலைவர் பதவிக்கு லாயக்குன்னும்,
    shame shame puppy shame ன்னும் பினாத்திர பன்னாடைகளை நெனச்சு வருத்தப்படாதீங்க.
    இந்த பொறம்போக்குக, பட்டாபோட்டு ப்ளாட்டு விக்குற உங்கள ஒன்னும் புடுங்க முடியாதுங்கயா.


    ஆணா ஒன்னுயா, நாம மட்டும் தின்னா போதாதுயா...
    நம்ம போலீசு பயபுள்லைக, வயித்தெறிச்சல்ல, உங்க மேட்டர‌ கொட்டோ கொட்டுனு வெட்டிப்பய ச‌வுக்குட்ட கொட்ரானுங்க‌...
    காசுதான் கடவுள்னு உங்களுக்கு தெறியாத அய்யா?
    நம்மள‌ ஊமை ஆக்கறதுக்கு, முதலாளிங்க பணத்தால அடிக்கிறதில்லையய்யா?
    அதுல கொஞ்சத்தை நாய்க்கு போடற பிஸ்கட் மாதிரி நம்மாளுங்கலுக்கு போடனுங்கையா.
    அப்பதான் நமக்கு வாலாட்டுவாங்க. இல்லேன்னா சவுக்கிட்ட‌ போயி சொரிஞ்சுவிடுவானுங்க.
    இந்த சவுக்கு ஒரு வெட்டி, பத்து நாள் அடியும் பத்து கேசும் வாங்க ரெடியாயிருக்கு.
    ஆனா நாம அப்படியாய்யா? வெரும் 3000 ருவால கஷ்டபட்டு IPS ஆன ஆள் இல்லையா?
    எதுக்குய்யா இந்த நாரப்பொழப்பு? சொந்தமா ஒரு ஏரோபிளான் வாங்குனோமா,
    தமிழ்நாட்ல ஒவ்வொரு சிட்டிலியும் 10 கிரவுண்ட் எடம் வாங்குனமான்னு இருக்கனும்யா.
    இன்னும் நல்லா பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க‌. வாழ்ரது கொஞ்ச நாள்தான்யா,
    அதனால இன்னும் நல்லா அனுபவிச்சுட்டு சாகலாம்யா...

    அய்யா ராவுல தூக்கம் கீக்கம் வரலேன்னா இந்த பாட்டை 3 தடவை பாடுங்கையா ஆருதலா இருக்கும்.
    கவலைபடாதே சகோதரா...
    எல்லாம் வல்ல அல்லாஹ் காத்து நிப்பான்
    பிராடு வேலைய மறச்சு வைப்பான்
    கவலைபடாதே சகோதரா...

    வாழ்க பாரதம் வாழ்க பாரத மணித்திரு நாடு.

    உங்கள் உண்மையுள்ள,
    நாசர்

    ReplyDelete
  25. P Ganesan, CoimbatoreAugust 23, 2010 at 8:45 AM

    Hi, I think its better you get a anticipatory bail, explaiining everything you have mentioned here.

    Do take the necessary immediate measures to protect yourself. Prtecting yourself is also very important.

    -P Ganesan

    Best of Luck!

    ReplyDelete
  26. அன்புள்ள சவுக்கு,
    உம் பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த தமிழகத்தில் உண்மை சொல்லும் சில ஊடகங்களில் முதன்மை பெறுவது எனது அறிவிக்கு எட்டிய வரை சவுக்கு மட்டுமே.

    ReplyDelete
  27. We are salute you. I am a fan of you. i got this site after your arrest ( I am very thank full to settu to introduce this kind of brave hearts), via true tamilan's site. We are with you. Because same tamil blood and the forever Hon Leader "Anna". Because we trust you are in the correct way. Thats why you are with his photo. From Colombo - Man.

    ReplyDelete
  28. mirattulukku payappada vendam.ungal pinnal yeraalamanor ullom. nitchayam ithu makkal iyakkam than.

    ReplyDelete
  29. இவ்வளவு அநியாயத்திற்கும் என்றாவது ஒரு நாள் பதில் சொல்ல வேண்டி வரும் - ஏக்கத்தோடு காத்திருக்கும் நடுத்தர குடி மகன்

    ReplyDelete
  30. You can start a news magazine / paper as somebody proposed then. We lake such truth from the IVth state which is bargained by the gained politician.

    ReplyDelete
  31. //The systematic indecent and fabricated stories for virtual assault on selected police officers indicates that a group of police officers who are enemical to these officers are the Actual Brain behind Savukku and it's team of perverts. The Tamils are the best perverts in the world who can reduce to such petty levels. Savukku is attempting to destablize the State with this clandestine tactics of hitting the Police officers in order to demoralise the Senior Police officers in their functioning//

    ச வு க் கு ...இது ஏதோ ஒரு ஆஃபீஸர் போட்ட comment மாதிரி இருக்கு..???

    ஒரு வேல நம்ம சேட்டு ஐயாவா இருக்குமா???...

    ReplyDelete
  32. Do not worry savukku. We are eith you always.

    ReplyDelete
  33. Dear Savukku!
    At the same time of appreciating the criticisms exhibited in the article, I would like to request you not to use the nickname of the great leader of Tamilnadu "Karma Veerar" for quoting the notorious persons.

    by-
    S. Ramachandran

    ReplyDelete